செப்.8 முதல் மனித உரிமை ஆணையத்தின் இரு அமர்வுகளிலும் நேரடி விசாரணை!

 

செப்.8 முதல் மனித உரிமை ஆணையத்தின் இரு அமர்வுகளிலும் நேரடி விசாரணை!

தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தின் இரண்டு அமர்வுகளிலும் நேரடியாக விசாரணை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் அனைத்தும் 5 மாதங்களாக மூடப்பட்டிருந்தன. தற்போது பாதிப்பு குறையாத நிலையிலும், மக்களின் வசதிக்காக அனைத்து சேவைகளுக்கும் அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் ரயில் சேவை, பள்ளி கல்லூரிகள் மற்றும் தியேட்டர்களுக்கான தடை தொடருகிறது. செப்.15 ஆம் தேதிக்கு மேல் அவற்றுக்கும் அரசு அனுமதி அளிக்கும் என கூறப்படுகிறது.

செப்.8 முதல் மனித உரிமை ஆணையத்தின் இரு அமர்வுகளிலும் நேரடி விசாரணை!

மக்கள் அதிகமாக கூடும் இடங்களுள் நீதிமன்றங்களும் ஒன்று என்பதால், நீதிமன்றங்களும் மூடப்பட்டு காணொளி வாயிலாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டதால், வரும் 7 ஆம் தேதி முதல் நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு மனித உரிமை ஆணையங்களிலும் செப்.8 ஆம் தேதி முதல் நேரடி விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடி விசாரணை நடத்த மனித உரிமை ஆணையத்தின் பொறுப்பு தலைவர் ஜெயச்சந்திரன் மற்றும் உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் முடிவு செய்துள்ளனர். மேலும், விசாரணையின் போது வழக்கு தொடர்பான வழக்கறிஞர்கள், பிரதிவாதிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.