செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் உயர்நீதிமன்றத்தில் நேரடி விசாரணை!

 

செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் உயர்நீதிமன்றத்தில் நேரடி விசாரணை!

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டது. அந்த வகையில் நீதிமன்றங்களும் மூடப்பட்டன. கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி தமிழகத்தில் ஊரடங்கு போடப்பட்டதால், அதற்கு மறுநாளே சென்னை உயர்நீதிமன்றம் மூடப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் முக்கியமான வழக்குகள் மட்டும் காணொளி வாயிலாக விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஊரடங்கு நீடிக்கப்பட்டுக் கொண்டே வந்ததால் அனைத்து வழக்குகளும் காணொளி வாயிலாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் உயர்நீதிமன்றத்தில் நேரடி விசாரணை!

இந்த நிலையில் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதியில் முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடியாக விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேரடி விசாரணை நடத்துவது குறித்து தலைமை நீதிபதி தலைமையில் மூத்த நீதிபதிகள் 7 பேர் அடங்கிய நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில், முதற்கட்டமாக இரண்டு நீதிபதிகள் அடங்கிய 6 அமர்வுகள் மட்டும் வழக்குகளை விசாரணை செய்யும் என்றும் தனி நீதிபதிகள் அமர்வு அனைத்தும் தற்போதுள்ள காணொளி காட்சி முறையில் தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்றும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. மார்ச் 25 ஆம் தேதி மூடப்பட்ட நீதிமன்றம் 160 நாட்களுக்கு பிறகு நேரடி விசாரணை நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.