“விரைவில் சூரப்பாவிடம் நேரடி விசாரணை” – நெருக்கும் கலையரசன் ஆணையம்!

 

“விரைவில் சூரப்பாவிடம் நேரடி விசாரணை” – நெருக்கும் கலையரசன் ஆணையம்!

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா மீது 280 கோடி ரூபாய் ஊழல் புகார்கள் எழுந்தன. தகுதியில்லாதவர்கள் பணி நியமனம், கல்லூரிக்கு வாங்கிய பொருட்களில் முறைகேடு என சூரப்பாவுக்கு எதிராக புகார்கள் குவிந்தன. சூரப்பா துணைவேந்தராக நியமிக்கப்பட்டதிலிருந்தே அரசுக்கும் அவருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் அவர் தன்னிச்சையாகச் செயல்பட்டது மோதலை மேலும் வலுக்கச் செய்தது.

“விரைவில் சூரப்பாவிடம் நேரடி விசாரணை” – நெருக்கும் கலையரசன் ஆணையம்!

சூரப்பா மீதான புகார்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவை தமிழக அரசு நியமித்தது. சூரப்பாவுக்கு ஆளுநர் பன்வாரிலாலின் ஆதரவு இருந்தபோது, சூரப்பாவுக்கு எதிரான ஊழல் புகாரில் முகாந்திரம் இருப்பதாக கலையரசன் குழு தெரிவித்து பரபரப்பைக் கிளப்பியது. தற்போது ஆணையத்தின் விசாரணை நிலை குறித்து கலையரசன் கூறியிருக்கிறார்.

“விரைவில் சூரப்பாவிடம் நேரடி விசாரணை” – நெருக்கும் கலையரசன் ஆணையம்!

இதுதொடர்பாக கலையரசன் கூறுகையில், “விசாரணைப் பணிகள் 85 சதவீதம் முடிந்துவிட்டன. கொரோனா பரவல் காரணமாக சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதில் தாமதம் உண்டாகியுள்ளது. அடுத்த வாரத்துக்குள் சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்படும். அதன்பின் சூரப்பாவிடம் நேரடி விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது தனது தரப்பு விளக்கங்களைத் தெரிவிக்க சூரப்பாவுக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படும். அரசு வழங்கிய காலக்கெடுவுக்குள் விசாரணைப் பணிகளை முடித்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும்” என்றார். கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி ஓய்வுபெற்ற சூரப்பா மீது நடவடிக்கை எடுக்க விதித்த தடையை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.