வங்க தேசத்துக்கு நேரடி பருத்தி ஏற்றுமதி – மத்திய அரசு பேச்சுவார்த்தை

 

வங்க தேசத்துக்கு நேரடி பருத்தி ஏற்றுமதி – மத்திய அரசு பேச்சுவார்த்தை

இந்திய வரலாற்றில் முதன்முறையாக, இந்திய பருத்தி கழகமே நேரடியாக, வங்கதேசத்திற்கு பருத்தி ஏற்றுமதி மேற்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து அதிகளவில் பருத்தி இறக்குமதி செய்யும் நாடுகளில் வங்கதேசமும் ஒன்று. ஆண்டுக்கு 25 லட்சம் முதல் 30 லட்சம் பேல்களை ( 170 கிலோ கொண்டது ஒரு பேல்) வங்கதேசம் இறக்குமதி செய்கிறது. வங்கதேசத்திற்கு பருத்தி ஏற்றுமதி செய்வதில் தனியார் வணிகர்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்திய பருத்தி கழகமே நேரடியாக பருத்தி ஏற்றுமதியில் ஈடுபட முயற்சி மேற்கொண்டுள்ளது.

வங்க தேசத்துக்கு நேரடி பருத்தி ஏற்றுமதி – மத்திய அரசு பேச்சுவார்த்தை

இது தொடர்பாக இருநாட்டு அரசுகளும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக இந்திய பருத்தி கழகத்தின் (சிசிஐ) முதன்மை நிர்வாக இயக்குனர் பிகே அகர்வால் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், பருத்தி ஏற்றுமதி தொடர்பான ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு இரு நாடுகளும் இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். வங்கதேசத்திற்கான பருத்தி ஏற்றுமதியில் 50 சதவீதத்தை சிசிஐ பெற்றால், அது பெரிய மைல்கல்லாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

வங்க தேசத்துக்கு நேரடி பருத்தி ஏற்றுமதி – மத்திய அரசு பேச்சுவார்த்தை

எந்த ஒரு நாட்டுடனும், இந்தியா இத்தகைய ஒப்பந்தத்தை இதற்கு முன்பு மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் அமையப்பெற்றால், வங்கதேசத்திற்கு 10 லட்சம் முதல் 15 லட்சம் பேல் அளவு கொண்ட பருத்தியை இந்திய பருத்தி கழகம் நேரடியாக ஏற்றுமதி செய்யும் என தெரிகிறது. மேலும் இந்த நடவடிக்கையினை தொடர்ந்து வேறு சில நாடுகளுக்கும் இந்திய அரசே நேரடியாக பருத்தி ஏற்றுமதியில் ஈடுபட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வங்க தேசத்துக்கு நேரடி பருத்தி ஏற்றுமதி – மத்திய அரசு பேச்சுவார்த்தை

2019-2020ம் பருத்தி ஆண்டில் ( அக்டோபர் – செப்டம்பர்) நாடெங்கிலும் உற்பத்தி செய்யப்பட்ட 310 லட்சம் பேல்கள் பருத்தியில் 115 லட்சம் பேல் பருத்தியை இந்திய பருத்தி கழகம் கொள்முதல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • எஸ். முத்துக்குமார்