”நிறுவன அதிகாரிகளுடன் நேரடியாக உரையாடும் வசதி” – வாட்ஸ் அப் திட்டம்

”நிறுவன அதிகாரிகளுடன் நேரடியாக உரையாடும் வசதி” – வாட்ஸ் அப் திட்டம்

வாட்ஸ் அப் செயலியில் இருந்தே அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொண்டு உரையாடும் வசதியை ஏற்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

”நிறுவன அதிகாரிகளுடன் நேரடியாக உரையாடும் வசதி” – வாட்ஸ் அப் திட்டம்

இதன்மூலம், வாட்ஸ் அப் பெயரை கூறி ஏமாற்று வேலைகளில் ஈடுபடும் மோசடி ஆசாமிகளிடமிருந்து, வாடிக்கையாளர்களை காக்கவும், மேலும் அவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு காணவும் முடியும் என வாட்ஸ் அப் நிறுவனம் கருதுவதாக தெரிகிறது. இதன்படி இந்த இன் ஆப் சப்போர்ட், வாட்ஸ் அப் செயலிக்குள்ளேயே கிடைக்கும் என்றும் அதன் மூலம் எளிதாக நிறுவனத்தின் அதிகாரிகளுடன் நேரடியாக உரையாட முடியும் என தெரிகிறது.

”நிறுவன அதிகாரிகளுடன் நேரடியாக உரையாடும் வசதி” – வாட்ஸ் அப் திட்டம்

இதேப்போல, ஸ்டிக்கர்களை தேடும் வசதியையும் ஏற்படுத்த வாட்ஸ் அப் திட்டமிட்டுள்ளது. வாட்ஸ் அப்பில் கிடைக்கும் ஜிஃப் பைல்கள் மற்றும் ஸ்டிக்கர்களை எளிதில் தேடி பயன்படுத்த இந்த வசதியை ஏற்படுத்த வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வாட்ஸ் அப் பின் இடது பக்க ஓரத்தில் இதற்கான செட்டிங்ஸ் அமைத்து, அதில் எமோஜி, ஜிஃப், மற்றும் ஸ்டிக்கர்களை தேடும் வசதியை ஏற்படுத்த வாட்ஸ் அப் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

  • எஸ். முத்துக்குமார்