‘மும்பை தாராவி மாணவர்களுக்காக குரல் கொடுப்போம்’ இயக்குநர் பா.இரஞ்சித்

 

‘மும்பை தாராவி மாணவர்களுக்காக குரல் கொடுப்போம்’ இயக்குநர் பா.இரஞ்சித்

தமிழக அரசு தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவருமே தேர்ச்சிபெற்றதாக அறிவித்தது. ஆனால், இந்த ஆரவாரமான அறிவிப்பு நடைமுறைக்கு வரும்போது காலாண்டு மற்றும் அரையாண்டுத்தேர்வு மதிப்பெண், வருகைப்பதிவேடு அடிப்படையில் தான் தேர்ச்சி என்றாகியுள்ளது. மேலும், பல்வேறு காரணங்களால் காலாண்டு அல்லது அரையாண்டுத் தேர்வினை எழுதத்ததவறிய மாணவர்கள் மற்றும் நேரடியாக பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்திருக்கும் தனித்தேர்வர்கள் ஆகியோரின் தேர்ச்சிநிலை என்னவென்று இன்னமும் தெளிவுபடுத்தப்படாமல் விடப்பட்டுள்ளது.

‘மும்பை தாராவி மாணவர்களுக்காக குரல் கொடுப்போம்’ இயக்குநர் பா.இரஞ்சித்

மேலும், மும்பையில் இயங்கும் இரண்டு பள்ளிகளின் மாணவர்கள் உள்ளிட்ட 190 பேர் தனித் தேர்வர்களாக தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் இவ்வாண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். கடந்தகால நடைமுறை இவ்வாண்டும் கடைபிடிக்கப்படும் என்று இந்த 190 பேரும் காத்திருந்தனர். ஆனால் இவர்களது தேர்ச்சிநிலையும் இன்னமும் தெளிவுடுத்தப்படாமல் விடப்பட்டுள்ளது.

அம்மாணாவர்களும் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என இயக்குநர் பா.இரஞ்சித் தனது ட்விட் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில், ‘தமிழ்நாட்டில் #10thexam ரத்து செய்ததை போல, தமிழ்வழி பயிலும் மற்ற மாநிலத்திலும், குறிப்பாக மும்பைதாராவி பகுதியில் தமிழகபாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களின் தேர்வை ரத்துசெய்து, தேர்ச்சிபெற்றவர்களாக
@CMOTamilNadu
அறிவிக்கவேண்டும் என்பதே அம்மக்களின் எதிர்ப்பார்ப்பு! குரல்கொடுப்போம்!!’ என்று குறிப்பிட்டு, தமிழக முதல்வரை டேக் செய்துள்ளார்.