ஏர் இந்தியாவின் கட்டமைப்பை மாற்றி கொள்ளுங்க ஆனால் அதனை விற்க வேண்டாம்.. தினேஷ் திரிவேதி கோரிக்கை

ஏர் இந்தியாவின் கட்டமைப்பை மாற்றி கொள்ளுங்க ஆனால் அதனை விற்க வேண்டாம்.. தினேஷ் திரிவேதி கோரிக்கை

ஏர் இந்தியாவின் கட்டமைப்பை வேண்டுமானால் மாற்றி கொள்ளுங்க ஆனால் தயவு செய்து அதனை விற்க வேண்டாம் என மத்திய அரசுக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தினேஷ் திரிவேதி கோரிக்கை விடுத்து உள்ளார்.

மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தினேஷ் திரிவேதி பேசுகையில் கூறியதாவது: வந்தே பாரத் மிஷனின் கீழ் வெளிநாடுகளிலிருந்து ஏராளமான இந்தியர்களை திரும்ப அழைத்து வந்ததற்காக நான் அரசாங்கத்தை பாராட்ட வேண்டும். யார் அதை செய்தார்கள்? அது ஏர் இந்தியா. நீங்கள் விரும்பினால் ஏர் இந்தியாவின் கட்டமைப்பை மாற்றலாம். ஆனால் தயவு செய்து அதை விற்க வேண்டாம். ஏர் இந்தியா ஹை டூ இந்துஸ்தான் ஹை.

ஏர் இந்தியாவின் கட்டமைப்பை மாற்றி கொள்ளுங்க ஆனால் அதனை விற்க வேண்டாம்.. தினேஷ் திரிவேதி கோரிக்கை
தினேஷ் திரிவேதி

நான் தனியார் துறைக்கு எதிரானவன் இல்லை. ஆனால் ஏர் இந்தியா இருந்திருக்காது என்றால் தனியார் விமான நிறுவனங்கள் இருந்திருக்காது. விமான போக்குவரத்தை அபிவிருத்தி செய்ய விமான போக்குவரத்து சட்டம் 1934ஐ முழுமையாக மாற்ற வேண்டும், மீண்டும் மீண்டும் திருத்தங்கள் செய்யப்படுவது சிறிய நன்மைகளை தரும். விமான சட்டம் 1934 முற்றிலும் மாற்றப்பட வேண்டும் இதனால் இந்தியா மேம்பட முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஏர் இந்தியாவின் கட்டமைப்பை மாற்றி கொள்ளுங்க ஆனால் அதனை விற்க வேண்டாம்.. தினேஷ் திரிவேதி கோரிக்கை
ஏர் இந்தியா

முன்னதாக பா.ஜ.க. எம்.பி. ஜி.வி.எல். நரசிம்மராவ், விமான சட்டத்தின் திருத்தங்களை அறிமுகம் செய்யும், சர்வதே அளவில் விமான போக்குவரத்து துறையில் அதிவேக வளர்ச்சி கண்டு வரும் நாடு இந்தியா என கூறினார். பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை விற்பனை செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஏர் இந்தியாவை வாங்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை அக்டோபர் 30ம் தேதிவரை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்தது. ஏர் இந்தியா நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.