“கட்சி கட்டுப்பாடுகளை மூத்த நிர்வாகிகள் மதிக்க வேண்டும்” – தினேஷ் குண்டுராவ்

 

“கட்சி கட்டுப்பாடுகளை மூத்த நிர்வாகிகள் மதிக்க வேண்டும்” – தினேஷ் குண்டுராவ்

கோவை

காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள், கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி கருத்து தெரிவிப்பது, சரியான நடைமுறை இல்லை என்று அக்கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோயிலில், தினேஷ் குண்டுராவ் இன்று சுவாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு விதிமுறைகளை பின்பற்றுவதில் பாரபட்சம் காட்டுவதாகவும், அனைவருக்கும் பொதுவாக இல்லாமல் எதிர்க்கட்சிகள் நடத்தும் பேரணி, பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்க மறுப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

“கட்சி கட்டுப்பாடுகளை மூத்த நிர்வாகிகள் மதிக்க வேண்டும்” – தினேஷ் குண்டுராவ்

மேலும், இதனால் தான் நேற்று நடந்த ஏர்கலப்பை யாத்திரையில் போலீசார் மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், தமிழகத்தில் தொகுதி பங்கீடு குறித்து இன்னும் முடிவுசெய்யப்பட வில்லை என்று கூறிய தினேஷ் குண்டுராவ், பீகார் தேர்தல் தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்கள் விமர்சித்து கருத்துக்கள் கூறுவது தவறில்லை என்றும், அதேநேரத்தில், கட்சியின் கட்டுப்பாடுகளை அனைவரும் மதித்து நடக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுகொண்டார்.