ஸ்டாலினை நாங்கள் முதல்வராக்குவோம்- காங்கிரஸ்

 

ஸ்டாலினை நாங்கள் முதல்வராக்குவோம்- காங்கிரஸ்

ஸ்டாலின் முதல்வராக தமிழக காங்கிரஸ் பாடுபடும் என தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

சட்டபேரவை தேர்தலுக்காக தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக -அதிமுக தேர்தல் பணிகளில் ஆயத்தமாகி வருகின்றன. சட்டபேரவை தேர்தலில் எந்தெந்த கட்சி யாருடன் கூட்டணி வைக்க போகிறது என்பதெல்லாம் ஓரளவு யூகிக்கும் வகையிலேயே உள்ளது. அதே சமயம் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? பாஜகவுடன் கூட்டணியில் நீடிக்குமா அதிமுக போன்ற சில சந்தேகங்களும் எழுந்துள்ளன. ஆனால் திமுகவின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் என்பதில் துளியும் சந்தேகமில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் இதே கேள்விக்கு திமுகவின் கூட்டணி காங்கிரஸ் கட்சி பதிலளித்துள்ளது.

ஸ்டாலினை நாங்கள் முதல்வராக்குவோம்- காங்கிரஸ்

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், “2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக்க தமிழக காங்கிரஸ் கட்சி பாடுபடும். மக்களவைத் தேர்தலுக்கு முன்பே ராகுல் காந்தியை அடுத்த பிரதமர் என முதன்முதலாக மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்ததை நாங்கள் நன்றியுணர்வுடன் நினைவில் கொண்டுள்ளோம். ராகுல்காந்தியின் கனவை நிஜமாக்க, வரும் தேர்தலை திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் சந்திக்கும்” எனக் கூறினார்.