`பேஸ்புக்கில் நோட்டமிட்ட இளைஞர்; காதல் வலையில் வீழ்ந்த சிறுமி!’- அலர்ட்டாக செயல்பட்டு மீட்ட போலீஸ்

 

`பேஸ்புக்கில் நோட்டமிட்ட இளைஞர்; காதல் வலையில் வீழ்ந்த சிறுமி!’- அலர்ட்டாக செயல்பட்டு மீட்ட போலீஸ்

பேஸ்புக்கில் நட்பை ஏற்படுத்தி காதல் வலையில் சிறுமிகளை வீழ்த்தி வந்த திண்டுக்கல் இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்தவர் முகமது ஷபின் (22). தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் உறுப்பினராக இருக்கும் இவர், பேஸ்புக்கில் ஆக்டிவாக இருப்பாராம். இவரின் வேலை பேஸ்புக்கில் இருக்கும் சிறுமிகளை நோட்டமிடுவதுதான். சிறுமிகளுக்கு ஆசை வார்த்தை கூறி அவர்களை ஆசைக்கு இணங்க வைக்கும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரது வலையில் மதுரையை சேர்ந்த டெய்சி (14) என்ற சிறுமி விழுந்துள்ளார். பேஸ்புக் மூலம் தனது காதலை சொன்ன ஷபின், டெய்சிக்கு பாலியல் எண்ணத்தை துண்டியுள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன் டெய்சியை மூளைச் சலவை செய்து வெளியூருக்கு அழைத்து செல்ல திட்டம் தீட்டியுள்ளார் ஷபின்.

அவனின் மாயவலையில் விழுந்த டெய்சியை நத்தத்திலிருந்து பைக் மூலம் மதுரை சென்று, அங்கிருந்து கடத்தி சென்றுள்ளார். இந்த நிலையில், மகளை காணவில்லை என்று அவரது பெற்றோர் மதுரை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரையடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர், ஷபினின் மொபைல் எண்ணை வைத்து அவரை பின் தொடர துவங்கினர். அப்போது, அவர்கள் பொள்ளாச்சியில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற தனிப்படையினர். ஆனால் அவர்களை தனிப்படையினரால் பிடிக்க முடியவில்லை. பின்னர் ஷபினியின் செல்போன் டவர் திண்டுக்கலை காட்டியது. இதையடுத்து, தனிப்படையினர் திண்டுக்கல் வந்தனர். அப்போது, லாட்ஜில் டெய்சியுடன் உடன் இருந்த ஷபினை கையும் களவுமாக தனிப்படையினர் பிடித்தனர்.

அப்போது, ஷபினியிடம் நடத்திய விசாரணையில், சிறுமியை கட்டாயப்படுத்தி ஷபின் அழைத்து சென்றதும், மதுரையிலிருந்து பைக்கிலேயே பொள்ளாச்சி, திண்டுக்கல் என பல்வேறு ஊர்களுக்கு சென்று, ஊரடங்கு காலத்திலும் ஊர் சுற்றியதும், தடைகளை மீறி லாட்ஜ்களில் கூடுதல் பணம் கொடுத்து தங்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து, டெய்சியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்த காவல்துறையினர், ஷபினை போக்ஸோ சட்டத்தில் கைது செய்ததோடு, அவரால் வேறு யாரோனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.