Home உணவு திண்டுக்கல் ‘தலப்பாக்கட்டி’ பிரியாணி ரகசியம்?

திண்டுக்கல் ‘தலப்பாக்கட்டி’ பிரியாணி ரகசியம்?

மிகவும் பிரபலமான திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணியை வீட்டிலேயே எப்படிச் செய்வது தெரியுமா?

தேவையான பொருட்கள்:

மட்டன்-1/2 கிலோ
சீரக சம்பா அரிசி-3 கப்
எண்ணெய்-2 டேபிள் ஸ்பூன்
நெய்-2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம்-2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய்-3 (நீளமாக கீறியது)
தக்காளி-2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட்-2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள்-1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள்-2 டேபிள் ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
கொத்தமல்லி-1/4 கப் (நறுக்கியது)
புதினா-1/4கப் (நறுக்கியது)
தண்ணீர்- 4 1/2 கப்

பிரியாணி மசாலாப் பொடிக்கு…

பட்டை-4,சோம்பு-1 1/2 டேபிள் ஸ்பூன்
கல்பாசி – 5
சீரகம்-2 டீஸ்பூன்
கிராம்பு-5
ஏலக்காய்-5

செய்முறை:

முதலில் சீரக சம்பா அரிசியை நீரில் நன்கு அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிரியாணி மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கியபின், தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக வதக்கி, அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட வேண்டும்.
பிறகு அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து சிறிது நேரம் பிரட்டி, அரைத்து வைத்துள்ள பிரியாணி மசாலா பொடியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.


அதன் பின்னர், மட்டனை சேர்த்து நன்கு பிரட்டி, 1 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 7-8 விசில் விட்டு, தீயை குறைத்து 15 நிமிடம் வேக வைத்து இறக்கி விட வேண்டும்.
விசில் போனதும், குக்கரை திறந்து, அதில் தண்ணீர் இருந்தால், மீண்டும் அடுப்பில் வைத்து, நீரை வற்ற வைக்க வேண்டும்.


இறுதியில் அதில் அரிசியை போட்டு நன்கு கிளறி, பின் 4 1/2 கப் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் கொதித்ததும், குக்கரை மூடி 1 விசில் விட்டு, தீயை குறைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கினால், திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி ரெடி!

  • இர.போஸ்

மாவட்ட செய்திகள்

Most Popular

“தோல்வி பயத்தால் ஸ்டாலின் பொய்களை கூறி வருகிறார்”- அமைச்சர் வேலுமணி

கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் நடைபெற்ற ஆயுதபூஜை விழாவில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு ஆயுதபூஜையை கொண்டாடினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக விவசாயிகளின்...

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் தீப்பிடித்து எரிந்த சொகுசு கார்

திருப்பத்தூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் சொகுசு கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆவடியை சேந்தவர் பேக்கரி உரிமையாளர் சக்கரபாணி. இவர் கர்நாடக...

சென்னை அணிக்கு வந்தது‘ஸ்பார்க்’… பெங்களூரை வீழ்த்தி வெற்றி!

ஐபிஎல் தொடரின் 44-வது லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொண்டது. பெங்களூர் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் வாய்ப்பை...

7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழக மாவட்டங்களில் குறிப்பாக,சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர்...
Do NOT follow this link or you will be banned from the site!