ரஜினிகாந்த் கட்சி தொடங்க காரணம் யார்? – மக்கள் மன்ற நிர்வாகி புதிய தகவல்

 

ரஜினிகாந்த் கட்சி தொடங்க காரணம் யார்? – மக்கள் மன்ற நிர்வாகி புதிய தகவல்

திண்டுக்கல்

நடிகர் ரஜினிகாந்தின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு, திண்டுக்கல்லில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தனியார் விடுதியில் நடந்த இந்த நிகழ்ச்சியில், அந்த அமைப்பின் மாநில செயலாளர் தம்புராஜ் கலந்துகொண்டு, ஏழை எளிய மக்கள் 100 பேருக்கு, தையல் இயந்திரம், மிக்சி, சிறுவர்களுக்கான சைக்கிள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

ரஜினிகாந்த் கட்சி தொடங்க காரணம் யார்? – மக்கள் மன்ற நிர்வாகி புதிய தகவல்

இந்த நிகழ்ச்சியில் பேசிய தம்புராஜ், ரஜினி மக்கள் மன்றத்தினர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்கியதாகவும், வேறு யாருடைய நிர்பந்தம் காரணமாகவும் கட்சி தொடங்கும் முடிவை அறிவிக்கவில்லை என்றும் கூறினார். மேலும், கூட்டணி குறித்து ரஜினிகாந்த் தான் முடிவு செய்வார் என கூறிய தம்புராஜ், ஆனால் தமிழகத்திலுள்ள அனைத்து தொகுதியிலும் பேட்டியிடுவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த், ஆன்மீக அரசியல் தான் பயணிப்பார் என்றும் கூறினார்.