10 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய புல்வெட்டி குளம் – சூடம் ஏற்றி வழிபட்ட விவசாயிகள்

 

10 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய புல்வெட்டி குளம் – சூடம் ஏற்றி வழிபட்ட விவசாயிகள்

திண்டுக்கல்

ஆத்தூர் அருகேயுள்ள புல்வெட்டி கண்மாய் 10 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக, மாவட்டம் முழுவதும் உள்ள அணைகள் மற்றும் குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழையால், செம்பட்டி பகுதியில் சுமார் 4 கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள கருங்குளம், நடுக்குளம் ஆகிய குளங்கள் முழுமையாக நிரம்பின.

10 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய புல்வெட்டி குளம் – சூடம் ஏற்றி வழிபட்ட விவசாயிகள்

மேலும், செம்பட்டியில் அமைந்துள்ள புல்வெட்டிகுளத்திற்கு தண்ணீர் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக வறண்டு கிடந்த புல்வெட்டி குளம் மெல்ல நிரம்பி வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை புல்வெட்டி குளம் முழுமையாக நிரம்பி, மறுகால் சென்றது. இதனால் அந்த கண்மாயை நம்பியுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும், மறுகால் பாயும் தண்ணீரை மலர்தூவி வரவேற்கும் விதமாக சூடம் ஏற்றி வணங்கிய அந்த பகுதிமக்கள், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.