கல்வி டிவியில் பாடம் நடத்தவுள்ளார் திண்டுக்கல் ஐ.லியோனி

 

கல்வி டிவியில் பாடம் நடத்தவுள்ளார் திண்டுக்கல் ஐ.லியோனி

கல்வி டிவியில் வாரத்திற்கும் ஒருமுறை வகுப்பு எடுக்கவுள்ளதாக திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார்.

கல்வி டிவியில் பாடம் நடத்தவுள்ளார் திண்டுக்கல் ஐ.லியோனி

பாடப்புத்தகங்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு மிகக் குறைந்த விலையிலும் வழங்கி வரும் பணியினை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம் மேற்கொண்டு வருகிறது. இதன் தலைவராக அண்மையில் திண்டுக்கல் லியோனி பதவியேற்று கொண்டார்.

கல்வி டிவியில் பாடம் நடத்தவுள்ளார் திண்டுக்கல் ஐ.லியோனி

இந்நிலையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “முதல்வர் மு.க. ஸ்டாலின் தன்னை சந்திக்க வருபவர்கள் பூங்கொத்திற்கு பதிலாக புத்தகம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்ததன் மூலம் அவருக்கு அளிக்கப்பட்ட சுமார் இரண்டு லட்சம் புத்தகங்களை நூலகங்களுக்கு கொடுத்துள்ளோம். தமிழில் இருக்கக்கூடிய பல நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. பொன்னியின் செல்வன், ஹிஸ்டரி ஆப் சிவிலிசேஷன். மாபெரும் தமிழ் கனவு போன்ற பல புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க உள்ளன. கல்வி தொலைக்காட்சியை நான் பார்வையிட்டேன். நான் முப்பது வருடமாக ஆசிரியராக பணியாற்றி உள்ளேன். அந்த அனுபவம் மூலம் கல்வி தொலைக்காட்சியில் வாரத்திற்கு ஒருமுறை ஆங்கிலம், வேதியியல், இயற்பியல் பாடங்களில் வகுப்பு எடுக்க உள்ளேன்” என்றார்.