திமுக கொள்கை பரப்புச் செயலாளராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமனம்!

 

திமுக கொள்கை பரப்புச் செயலாளராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமனம்!

திமுக கொள்கை பரப்புச் செயலாளர்கள் பொறுப்பில் திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுக கொள்கை பரப்புச் செயலாளராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமனம்!

இதுகுறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழக கொள்கை பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த ஆ. ராசா எம்பி துணை பொதுச் செயலாளராகவும் ,தங்க தமிழ்ச்செல்வன் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால் அவர்கள் கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு ,அவர்களுக்கு பதிலாக ஏற்கனவே கொள்கை பரப்புச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வரும் திருச்சி சிவா எம்பி அவர்களுடன், கழகசட்டதிட்ட விதி 18, 19ம் படி திண்டுக்கல் ஐ லியோனி மற்றும் முனைவர் சபாபதி மோகன் ஆகியோர், கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப் படுகிறார்கள் என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தேனி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட பொறுப்பாளர்களாக தங்க தமிழ்செல்வன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.