பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி – பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளிப்பு

பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி – பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளிப்பு

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி, கோட்டைமாரியம்மன் கோயில் குளத்தில் நடந்த ஒத்திகை நிகழ்ச்சியில் படகுகள் கவிழ்ந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, அவர்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்துபொதுமக்களுக்கு தத்ரூபமாக செய்து காட்டினர்.

பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி – பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளிப்பு

மேலும், இதனையொட்டி அமைக்கப்பட்டிருந்த பேரிடர் மீட்பு சாதனங்களின் கண்காட்சியினை, மாவட்ட ஆட்சியர்விஜயலட்சுமி தொடங்கி வைத்தார். இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி – பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளிப்பு

இந்நிகழ்ச்சியில், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படை முதுநிலை கமாண்டன்ட் ரேகா நம்பியார், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜராஜன,கோட்டாட்சி உஷா ,தீயணைப்பு துறை உதவி இயக்குநர் சுரேஷ்கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.