திண்டுக்கல்- அரசு ஆய்வகத்தில் 1 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை

 

திண்டுக்கல்- அரசு ஆய்வகத்தில் 1 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனை ஆய்வகத்தில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பை கண்டறிய கடந்த மே மாதம் நவீன ஆய்வகம் அமைக்கப்பட்டது. இந்த ஆய்வகத்தில் 2 நவீன இயந்திரங்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்றை

திண்டுக்கல்- அரசு ஆய்வகத்தில் 1 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை

கண்டறியும் பரிசோதனை 24 மணிநேரமும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதன்படி நாள்தோறும் சுமார் 1,300 பேருக்கு இங்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. இதுகுறித்து பேசிய மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் சிவக்குமார், இந்த ஆய்வகத்தில் இதுவரை ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு சுமார் 4,400 பேருக்கு, தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறினார். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர்,

திண்டுக்கல்- அரசு ஆய்வகத்தில் 1 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை

ஒருவரிடமிருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்ட 12 முதல் 20 மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறதாக கூறிய அவர், அதனை மேலும் குறைக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.