கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்புசார தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

 

கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்புசார தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அந்த அமைப்பின் துணைப் பொதுச்செயலாளர் சக்திவேல் உட்பட100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, இணையவழி பதிவு புதுப்பித்தல் மற்றும் கேட்பு மனு சமர்ப்பித்தல் எளிமையாக்கப்பட வேண்டும் எனவும், பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனு சமர்ப்பித்தல் உட்பட அனைத்திலும் தொழிற்சங்கம் பரிந்துரை கட்டாயமாக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்புசார தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மேலும், புதுப்பித்துள்ள தகுதியான அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர் அனைவருக்கும் விடுபட்ட கொரோனா கால நிவாரண நிதி உடனே வழங்கவும், தற்போது நடைமுறையிலுள்ள அலைபேசி ஒடிபி எண் பரிவர்த்தனையை குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் நீடிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.