குடும்ப தகராறில் பெண் ஊராட்சி தலைவர் தூக்கிட்டு தற்கொலை

 

குடும்ப தகராறில் பெண் ஊராட்சி தலைவர் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே குடும்ப தகராறில் பெண் ஊராட்சி மன்ற தலைவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகாவிற்கு உட்பட்ட சத்திரபட்டியை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவருக்கு இந்திரா என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். இவர்கள் திண்டுக்கல் அடுத்த சென்னமநாயக்கன் பட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். மேலும், அருகிலேயே தென்னை நார் நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் சத்திரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக இந்திரா வெற்றிபெற்று, பணியாற்றி வந்துள்ளார்.

குடும்ப தகராறில் பெண் ஊராட்சி தலைவர் தூக்கிட்டு தற்கொலை

பணி நிமித்தமாக சென்னமநாயக்கன் பட்டியில் இருந்து சத்திரபட்டிக்கு அடிக்கடி சென்று வருவதில் கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்து வந்துள்ளது. இதனால் மனமுடைந்த இந்திரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

குடும்ப தகராறில் பெண் ஊராட்சி தலைவர் தூக்கிட்டு தற்கொலை

தகவலின் பேரில் தாடிக்கொம்பு போலீசார் இந்திராவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர். இதில், குடும்ப தகராறில் கணவர் பிரவீன்குமார், இந்திராவிடம் பேசாமல் வெளியில் உணவு சாப்பிட்டு வந்ததால், மனமுடைந்து அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.