ரியல் எஸ்டேட் அதிபரிடம் நூதன முறையில் ரூ.40 லட்சம் மோசடி – தந்தை, மகன் கைது

ரியல் எஸ்டேட் அதிபரிடம் நூதன முறையில் ரூ.40 லட்சம் மோசடி – தந்தை, மகன் கைது

திண்டுக்கல்

வெளிநாட்டில் கட்டுமான பணி ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக கூறி, ரியல் எஸ்டேட் அதிபரிடம் 40 லட்சம் ரூபாய் மோசடி செய்த தந்தை, மகனை போலீசார் கைதுசெய்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் ஜீவா. ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் இவர், ஒப்பந்த அடிப்படையில் கட்டுமான பணிகளும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில்

ரியல் எஸ்டேட் அதிபரிடம் நூதன முறையில் ரூ.40 லட்சம் மோசடி – தந்தை, மகன் கைது

அதேபகுதியை சேர்ந்த சஞ்சீவி மற்றும் அவரது மகன் இமானுவேல் ஆகியோர், மாலத்தீவில் ரூ.200 கோடி மதிப்பிலான கட்டுமான பணி ஒப்பந்தத்தை பெற்றுத் தருவதாகவும், இதற்காக, வெளிநாட்டு வங்கியில் ரூ.600 கோடி கடன் பெற்று தருவதாகவும் கூறியுள்ளனர். இதனை நம்பி ஜீவா, 40 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். இந்நிலையில் பணத்தை பெற்றுகொண்ட தந்தை, மகன் இருவரும், பின்னர் ஜீவாவிற்கு ஒப்பந்தத்தை பெற்றுத் தராமல் ஏமாற்றி

ரியல் எஸ்டேட் அதிபரிடம் நூதன முறையில் ரூ.40 லட்சம் மோசடி – தந்தை, மகன் கைது

வந்ததாக கூறப்படுகிறது. மேலும், பணத்தை திருப்பிகேட்டும் அவர்கள் தராத நிலையில், இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி-யிடம் புகார் அளித்தார். இதனையடுத்து மாவட்ட எஸ்.பி உத்தரவின் பேரில், குற்றப்பிரிவு போலீசார் சஞ்சீவி மற்றும் இமானுவேலிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஜீவாவிடம் 40 லட்சம் ரூபாய் பணம் நூதன முறையில் மோசடி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைதுசெய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.