• February
    25
    Tuesday

Main Area

Main



மக்களை குழப்பமடைய செய்த தினகரன், தினத் தந்தி! ஓட்டுநர் கொலையில் ட்விஸ்ட்!!

Paper
Paper

தூத்துக்குடியில் ஓட்டுநர் ஒருவர் மற்றொரு ஓட்டுநரை கொலை செய்த செய்தி தினகரன் பத்திரிக்கையில் வேறு வார்த்தைகளிலும், தினதந்தி பத்திரிக்கையில் வேறு வார்த்தையிலும் அச்சடிக்கப்பட்டிருந்தது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. 

தூத்துக்குடி தாளமுத்துநகர் சமீர் வியாஸ் நகரைச் சேர்ந்தவர் ராமர். இவருடைய மகன் பொன்வண்டு என்ற பொன்ராஜ். இவர், சிலுவைப்பட்டியைச் சேர்ந்த வக்கீல் திலக்கிடம் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அங்கு அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கணேசபூபதி (25) என்பவரும் மாற்று டிரைவராக வேலை பார்த்தார்.   கடந்த ஜூலை மாதம் கணேசபூபதி பெட்ரோல் வாங்க சென்றார். ஆனால் அவர் நீண்ட நேரம் கழித்து வந்தார். அப்போது தன்னை சிலர் தாக்கியதாக கூறினார். இதனால் வக்கீல் திலக், பொன்வண்டு என்ற பொன்ராஜ், கணேசபூபதி உள்ளிட்டோர் பெட்ரோல் பங்க் அருகே சென்று பார்த்தனர். ஆனால் அங்கு யாரும் இல்லாததால், அவர்கள் மீண்டும் வீட்டுக்கு திரும்பினர். அப்போது பொன்ராஜ் வீணாக அலைய வைத்து விட்டதாக கூறினார். இதில் பொன்ராஜிக்கும், கணேசபூபதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பொன்ராஜ் காரில் இருந்த அரிவாளை எடுத்து கணேசபூபதியை சரமாரியாக வெட்டினார். இதில் கணேசபூபதி துடித்துடித்து இறந்தார்.

Murder

இதுதொடர்பான வழக்கு தூத்துக்குடி மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கவுதமன், குற்றம் சாட்டப்பட்ட பொன்ராஜிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. 

மேற்கண்ட செய்தி தினத் தந்தி நாளிதழில் தூத்துக்குடி வாலிபரை கொன்ற டிரைவருக்கு ஆயுள் தண்டனை என்றும், தினகரன் நாளிதலில் தூத்துக்குடி டிரைவரை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை என இருந்துள்ளது. ஆக கொல்லப்பட்டவரும், கொலை செய்யப்பட்டவரும் டிரைவராக பணி புரிந்ததால் இத்தகைய குழப்பம் ஏற்பட்டது. 

2018 TopTamilNews. All rights reserved.