மேற்கு வங்க மக்கள் பயத்தில் உள்ளனர்.. மத்திய படைகளை குவியுங்க.. தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ.க. கோரிக்கை

மேற்கு வங்க மக்கள் பயத்தில் உள்ளனர்.. மத்திய படைகளை குவியுங்க.. தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ.க. கோரிக்கை

மேற்கு வங்க மக்கள் பயத்தில் உள்ளதால் விரைவாக மத்திய படைகளை குவியுங்க என்று இந்திய தேர்தல்ஆணையத்திடம் பா.ஜ.க. கோரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ம்மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்த சூழ்நிலையில் அம்மாநில பா.ஜ.க. தலைவர் திலிப் கோஷ் தலைமையிலான பா.ஜ.க.வினர் நேற்று தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து பேசினர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த திலிப் கோஷ் கூறியதாவது:

மேற்கு வங்க மக்கள் பயத்தில் உள்ளனர்.. மத்திய படைகளை குவியுங்க.. தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ.க. கோரிக்கை
திலிப் கோஷ்

தேர்தல் ஆணையத்தின் முழுக் குழுவும் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தல்களுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய இங்கு வந்துள்ளது. நடுநிலை மற்றும் அமைதியான சூழலில் மக்கள் தங்கள் உரிமையை பயன்படுத்தக்கூடிய சூழலை உறுதி செய்யுமாறு எதிர்க்கட்சி என்ற முறையில் நாங்கள் அவர்களை வலியுறுத்தியுள்ளோம். மத்திய படைகள் இங்கு நிறுத்தப்படுவது முக்கியம்.

மேற்கு வங்க மக்கள் பயத்தில் உள்ளனர்.. மத்திய படைகளை குவியுங்க.. தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ.க. கோரிக்கை
இந்திய தேர்தல் ஆணையம்

தேர்தலின் போது மேற்கு வங்கத்தில் பயத்தின் சூழல் உள்ளது. 2019 மக்களவை தேர்தலின்போது மாநிலத்தின் 42 மாநில நாடாளுமன்ற தொகுதிகளிலும் வன்முறை பதிவாகி இருந்தது. சுதந்திரமான மற்றும் நியாயமான வாக்குப்பதிவுக்கு, வாக்குச் சாவடிகள் உள்ளே மத்திய படைகளும் மற்றும் வெளியே மாநில காவல் துறையும் நிறுத்தப்பட வேண்டும். எல்லையில் உள்ள வாக்காளர்கள் பட்டியலில் ரோஹிங்கியாக்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பது எங்களுக்கு தெரியும். இதை இந்திய தேர்தல் ஆணையம் கவனிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.