சிதம்பரத்தில் தீட்சிதர்கள் திடீர் போராட்டம்

 

சிதம்பரத்தில் தீட்சிதர்கள் திடீர் போராட்டம்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஆன்லைன் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீட்சிதர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சனம் மற்றும் ஆருத்ரா திருவிழா இரண்டும் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு ஆருத்ரா தரிசனம் வரும் 30 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 31 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறவுள்ளது. நடராஜர் கோயிலில் தேரோட்டம் 29 ஆம் தேதியும், 30 ஆம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெறவுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் சிதம்பரம் நடராஜர் கோவில் தேர் திருவிழா மற்றும் ஆருத்ரா தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் ஆன்லைன் பதிவு கட்டாயம் என மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீட்சிதர்கள் மற்றும் சிவபக்தர்கள் சிதம்பரம் நடராஜர் கோயில் வாசலில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிதம்பரத்தில் தீட்சிதர்கள் திடீர் போராட்டம்

முன்னதாக நாளை நடைபெறவுள்ள சிதம்பரம் நடராஜர் கோவில் தேர் திருவிழாவில் பங்கேற்க http://aruthracarfest.com என்ற இணையதளத்திலும், நாளை மறுநாள் கோயிலுக்குள் நடைபெறவிருக்கும் தரிசனத்தில் பங்கேற்க http://aruthraonline.com என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது.