சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

 

சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

இயக்குநர்  கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் திரைப்படம் டிக்கிலோனா. இந்த  படத்தில்,  நடிகைகள் அனகா மற்றும் ஷிரின் இருவரும் நடிக்கின்றனர். இவர்களுடன் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், நிழல்கள் ரவி, சித்ரா லட்சுமணன்,  நான் கடவுள் ராஜேந்திரன், ஷாரா ஆகியோர் நடிக்கின்றனர். சந்தானம் மூன்று வேடங்களில் நடித்து வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.  கேமராமேனாக  ஆர்வியும்,  எடிட்டராக ஜோமினும்  பணியாற்றியுள்ளனர். இந்நிலையில்  டிக்கிலோனா படப்பிடிப்பு கடந்த நவம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில்  படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. இதனால் படக்குழுவினர் அடுத்து போஸ்ட் புரொடக்சன் பணிகளைத் தீவிரமாக கவனிக்க இருக்கிறார்கள். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் சந்தானம் 3 வேடங்களில் நடிக்கிறார். இந்தப் படத்தில் முதல் முறையாக சந்தானம் 3 கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

 

சந்தானத்தின் 3 கதாபாத்திரத்தின் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளனர். இதனை சந்தானமும் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.