மோடிக்கு பதில் சுஷ்மா சுவராஜை பா.ஜ.க. தேர்வு செய்து இருந்தால் நாடு சிறப்பாக இருந்திருக்கும்.. திக்விஜய சிங்

மோடிக்கு பதில் சுஷ்மா சுவராஜை பா.ஜ.க. தேர்வு செய்து இருந்தால் நாடு சிறப்பாக இருந்திருக்கும்.. திக்விஜய சிங்

மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திக்விஜய சிங் அதிரடியாக, வெளிப்படையாக தனது கருத்துக்களை கூறுபவர். 2014ல் பிரதமர் மோடிக்கு பதில் மறைந்த வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை . பிரதமராக பா.ஜ.க. தேர்வு செய்து இருந்தால் நாடு சிறப்பாக இருந்திருக்கும் என அவர் தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.

மோடிக்கு பதில் சுஷ்மா சுவராஜை பா.ஜ.க. தேர்வு செய்து இருந்தால் நாடு சிறப்பாக இருந்திருக்கும்.. திக்விஜய சிங்

திக்விஜய சிங் இது தொடர்பாக டிவிட்டரில், யாருக்கு தெரியும், 2014ல் மோடி ஜிக்கு பதிலாக சுஷ்மா சுவராஜ் ஜியை பா.ஜ.க. தேர்வு செய்து இருந்தால், அவர் இன்று நம்முடன் இருந்திருப்பார், நமது நாடும் சிறப்பாக இருந்திருக்கும். சுஷ்மா சுவராஜ் உடன் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்ட போது நான் இதனை வெளிப்படையாக தெரிவித்தேன். ஸ்மிரிதி இரானி ஜி நீங்கள் யோசனைகளை பெற தொடங்க வேண்டும் என்பது இதன் அர்த்தமல்ல என பதிவு செய்து இருந்தார்.

மோடிக்கு பதில் சுஷ்மா சுவராஜை பா.ஜ.க. தேர்வு செய்து இருந்தால் நாடு சிறப்பாக இருந்திருக்கும்.. திக்விஜய சிங்

திக்விஜய சிங் கடந்த சில தினங்களுக்கு முன், காங்கிரசுக்கு துரோகம் செய்தவர்களை நகரங்கள் மற்றும் கிராமங்களில் மக்கள் அனுமதி மறுத்ததால் பா.ஜ.க. பயத்தில் உள்ளது. பா.ஜ.க.வின் போலி செய்திகளுக்கு ஆதரவு கிடைக்காததால் சிவ்ராஜ் மற்றும் மகாராஜ் (ஜோதிராதித்ய சிந்தியா) இருவரும் கவலைப்படுகிறார்கள். சம்பலின் நீர் புரட்சிகரமானது, இது துரோகிகளுக்கு ஒரு பாடம் கற்பிக்கும். என பா.ஜ.க. எம்.பி. ஜோதிராதித்ய சிந்தியாவின் இந்தூர் வருகை குறித்து திக்விஜய சிங் மறைமுகமாக தாக்கி பேசியது குறிப்பிடத்தக்கது.