நாடாளுமன்றத்தில் பெகாசஸ் பற்றி விவாதிக்க மோடி-அமித் ஷா ஏன் பயப்படுகிறார்கள்? .. திக்விஜய சிங் கேள்வி

நாடாளுமன்றத்தில் பெகாசஸ் பற்றி விவாதிக்க மோடி-அமித் ஷா ஏன் பயப்படுகிறார்கள்? .. திக்விஜய சிங் கேள்வி

நாடாளுமன்றத்தில் பெகாசஸ் (உளவு விவகாரம்) பற்றி விவாதிக்க மோடி-அமித் ஷா ஏன் பயப்படுகிறார்கள்? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் சிங் படேல் மற்றும் அஸ்வினி வைஷ்ணவ், 40க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், 3 எதிர்க்கட்சி தலைவர்கள், பணியில் இருக்கும் நீதிபதி, வர்த்தகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்பட 300க்கும் மேற்பட்ட உறுதி செய்யப்பட்ட தொலைப்பேசி எண்கள், இஸ்ரேலின் உளவு சாப்ட்வேரான பெகாசஸை பயன்படுத்தி அடையாளம் தெரியாத அமைப்பால் கண்காணிக்கப்பட்டு இருக்கலாம் என்று கடந்த வாரம் சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டு இருந்தது. பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

நாடாளுமன்றத்தில் பெகாசஸ் பற்றி விவாதிக்க மோடி-அமித் ஷா ஏன் பயப்படுகிறார்கள்? .. திக்விஜய சிங் கேள்வி
திக்விஜய சிங்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில், நாடாளுமன்றத்தில் பெகாசஸ் (உளவு விவகாரம்) பற்றி விவாதிக்க மோடி-அமித் ஷா ஏன் பயப்படுகிறார்கள்? உள் பாதுகாப்பு அல்லது போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு அல்லது குற்றவாளிகளுக்கு எதிராக உளவு பார்ப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால் என்.எஸ்.ஓ. மற்றும் இஸ்ரேலியர்களுக்கு அனைத்து தகவல்களுக்கும் அணுகலை வழங்கவில்லை அல்லவா?

நாடாளுமன்றத்தில் பெகாசஸ் பற்றி விவாதிக்க மோடி-அமித் ஷா ஏன் பயப்படுகிறார்கள்? .. திக்விஜய சிங் கேள்வி
பெகாசஸ் சாப்ட்வேர்

இந்த (உளவு) பிரச்சினையை நான் 2019ல் மாநிலங்களவையில் எழுப்பினேன். அன்றைய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் எனது கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. இன்று (நேற்று) பெகாசஸ் குறித்து விவாதிக்கப்பதற்காக மாநிலங்களவையில் நோட்டீஸ் கொடுத்துள்ளேன். மோடியும், அமித் ஷாவும் முழு விவாதத்துக்கு ஒப்புக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். எல்லாவற்றும் மேலாக இது தேசிய பாதுகாப்பு தொடர்பான அவசர விஷயம் என்று பதிவு செய்துள்ளார்.