பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் ஊழல் குறித்து ரகசிய அறிக்கை கேளுங்க- ஆர்.எஸ்.எஸ். தலைவரிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்

 

பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் ஊழல் குறித்து ரகசிய அறிக்கை கேளுங்க- ஆர்.எஸ்.எஸ். தலைவரிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்

மத்திய பிரதேச காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய சிங், அம்மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் நடத்தை மற்றும் ஊழல்கள் குறித்து ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களிடம் ரகசிய அறிக்கையை கேட்டு பெறுமாறு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை டிவிட்டரில் வலியுறுத்தியுள்ளார்.

பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் ஊழல் குறித்து ரகசிய அறிக்கை கேளுங்க- ஆர்.எஸ்.எஸ். தலைவரிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்

திக்விஜய சிங் இது தொடர்பாக டிவிட்டரில், சங்கத்தின் தலைவர் மோகன் பகவத் ஜி, போபால் நகரில் அன்பான வரவேற்பு. பா.ஜ.க. முதல்வர் மற்றும் அமைச்சர்களின் நடத்தைகள் மற்றும் ஊழல்கள் தொடர்பாக உங்களது தொண்டர்களிடமிருந்து ரகசிய அறிக்கைகளை தயவு செய்து பெறுங்கள். சட்டவிரோத மணல் சுரங்கத்தில் ஈடுபட்டுள்ள சிவராஜ் ஜி குடும்ப உறுப்பினர்கள் குறித்தும் விசாரியுங்க.

பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் ஊழல் குறித்து ரகசிய அறிக்கை கேளுங்க- ஆர்.எஸ்.எஸ். தலைவரிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்

மத்திய பிரதேசத்தில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கப்படுவது குறித்தும் நீங்க விசாரிக்க வேண்டும். இந்த வகையான ஜனநாயகத்தில், எம்.எல்.ஏ.க்களின் நடத்தை குறித்தும், எம்.எல்.ஏ.க்களாக ஆகாமல் அமைச்சர்களாக உருவாக்குப்படுவது குறித்து நீங்க மிகவும் தெளிவாக இருங்க. என பதிவு செய்து இருந்தார்.