ஐ.ஏ.எஸ். அதிகாரி இடமாற்றம்…. ம.பி. முதல்வரின் நேர்மைக்கு பிரகாசமான உதாரணம்.. திக்விஜய சிங் கிண்டல்

 

ஐ.ஏ.எஸ். அதிகாரி இடமாற்றம்…. ம.பி. முதல்வரின் நேர்மைக்கு பிரகாசமான உதாரணம்.. திக்விஜய சிங் கிண்டல்

மத்திய பிரதேசத்தில் நில மாபியாக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டதை குறிப்பிட்டு, முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானின் நேர்மைக்கு பிரகாசமான எடுத்துக்காட்டு என்று திக்விஜய சிங் கிண்டல் செய்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. 2020 டிசம்பர் 26ம் தேதியன்று ஹோஷங்காபாத் மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், நில மாபியாக்கள் மாநிலத்தை விட்டு வெளியேறி விடுங்கள். நான் இப்போதெல்லாம் மோசமான மனநிலையில் இருக்கிறேன். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை நான் விடமாட்டேன் என்று கூறியிருந்தார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரி இடமாற்றம்…. ம.பி. முதல்வரின் நேர்மைக்கு பிரகாசமான உதாரணம்.. திக்விஜய சிங் கிண்டல்
மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

இந்த சூழ்நிலையில், அம்மாநிலத்தில் நில மாபியாக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை பா.ஜ.க. அரசு இடமாற்றம் செய்துள்ளது. இது அம்மாநிலத்தில் பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான குசூம் சிங் மெஹ்தேலையும் ஐ.ஏ.எஸ். அதிகாரி இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதனை மேற்கோள்காட்டி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானை கிண்டல் செய்துள்ளார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரி இடமாற்றம்…. ம.பி. முதல்வரின் நேர்மைக்கு பிரகாசமான உதாரணம்.. திக்விஜய சிங் கிண்டல்
குசூம் சிங் மெஹ்தேலை

இது தொடர்பாக சிவ்ராஜ் சிங் சவுகான் டிவிட்டரில் தொடர்ச்சியான ட்விட்டுகளில், சிவ்ராஜ் ஜி நீங்கள் 10 அடி குழியில் நில மாபியாக்களை அடக்கம் செய்வதற்கு பதிலாக, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை தண்டித்தீர்கள். இது உங்கள் நேர்மைக்க பிரகாசமான எடுத்துக்காட்டு. கொஞ்சம் வெட்கப்படுங்கள். மற்றொரு டிவிட்டில், குசூம் சிங் மெஹ்தேலை அறிக்கை மேற்கொள்காட்டி, குசும் மெஹ்தலே ஜி.ஜி. மிகவும் நேர்மையான மற்றும் கடின உழைப்பாளி. நான் எப்போதும் அவரை மதிக்கிறேன் என்று பதிவு செய்து இருந்தார்.