யோகி ஆதித்யநாத் அரசாங்கம் ஏழைகள் மற்றும் தலித்துகளுக்கு எதிரானது… திக்விஜய சிங் குற்றச்சாட்டு

யோகி ஆதித்யநாத் அரசாங்கம் ஏழைகள் மற்றும் தலித்துகளுக்கு எதிரானது… திக்விஜய சிங் குற்றச்சாட்டு

உத்தர பிரதேச அரசு ஏழைகள் மற்றும் தலித்துகளுக்கு எதிரானது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய சிங் குற்றம்சாட்டினார்.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன் ஹத்ராஸில் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 19 வயது தலித் பெண் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் யோகி ஆதித்யநாத் அரசை பல அரசியல் கட்சி தலைவர்களும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

யோகி ஆதித்யநாத் அரசாங்கம் ஏழைகள் மற்றும் தலித்துகளுக்கு எதிரானது… திக்விஜய சிங் குற்றச்சாட்டு
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

தலித் பெண் மரணம் சம்பவம் தொடர்பாக மத்திய பிரதேச காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய சிங் யோகி ஆதித்யநாத் அரசை கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். திக்விஜய சிங் டிவிட்டரில், உத்தர பிரதேசத்தில் யோகி அரசாங்கம் முற்றிலும் ஏழைகள் மற்றும் தலித்துகளுக்கு எதிரானது. மேலும் மாநிலத்தில் குற்றவாளிகளுக்கு முழு பாதுகாப்பு வழங்குகிறது.

யோகி ஆதித்யநாத் அரசாங்கம் ஏழைகள் மற்றும் தலித்துகளுக்கு எதிரானது… திக்விஜய சிங் குற்றச்சாட்டு
பிரியங்கா காந்தி

இந்த போராட்டத்தில் பிரியங்கா காந்தி ஜி தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துடன் இருக்க வேண்டும். என பதிவு செய்து இருந்தார். ஹத்ராஸ் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் இறுதி சடங்கு அவரது சொந்த ஊரில் நேற்று அதிகாலை வேளையில் நடைபெற்றது.