தலித் பெண் என்பதால் ஹத்ராஸ் சம்பவத்துக்கு நடுத்தர வர்த்தகத்தினர் குரல் கொடுக்கவில்லை?.. திக்விஜய சிங்

 

தலித் பெண் என்பதால் ஹத்ராஸ் சம்பவத்துக்கு நடுத்தர வர்த்தகத்தினர் குரல் கொடுக்கவில்லை?.. திக்விஜய சிங்

நிர்பயா பாலியல் பலாத்காரம் பிரச்சினையை எழுப்பிய அளவுக்கு ஹத்ராஸ் சம்பவத்துக்கு நடுத்தர வர்த்தகத்தினர் குரல் எழுப்பவில்லை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய சிங் டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், 2012ல் நடந்த நிர்பயா பாலியல் பலாத்காரம் பிரச்சினையை எழுப்பியது போல் இந்த முறை (ஹத்ராஸ் சம்பவம்) நடுத்தர வர்த்தகத்தினர் குரல் எழுப்பவில்லை. ஏனென்றால் அவர் ஒரு தலித் அல்லது கிராமத்தை சேர்ந்தவர்? அல்லது இது போன்ற பிரச்சாரங்களை நடத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ்./பா.ஜ.க. இருப்பது போன்ற அமைப்பு பலம் இன்றைய எதிர்க்கட்சிகளுக்கு இல்லையா?

தலித் பெண் என்பதால் ஹத்ராஸ் சம்பவத்துக்கு நடுத்தர வர்த்தகத்தினர் குரல் கொடுக்கவில்லை?.. திக்விஜய சிங்
நிர்பயா வழக்கில் நீதி கேட்டு போராடிய மக்கள் (கோப்பு படம்)

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆராய்ந்து பார்க்க வேண்டிய விஷயம்? அவர்கள் வேண்டுமா? அவர்கள் வேண்டும். ஹத்ராஸ் திகில் இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. பா.ஜ.க. தலித்துகளுக்கு எதிரானது. முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் இவ்வாறு அவர் பதிவு செய்து இருந்தார்.

தலித் பெண் என்பதால் ஹத்ராஸ் சம்பவத்துக்கு நடுத்தர வர்த்தகத்தினர் குரல் கொடுக்கவில்லை?.. திக்விஜய சிங்
சோனியா காந்தி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று முன்தினம் ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக வெளியிட்ட வீடியோவில், இந்த நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் ஹத்தராஸின் மிருகத்தனமான சம்பவம் குறித்து சோகமாகவும், கோபமாகவும் உள்ளனர். இது நம் சமூகத்தின் மீதான கறை. நான் கேட்க விரும்புகிறேன், பெண்ணாக இருப்பது குற்றமா? ஏழை பெண்ணாக இருப்பது குற்றமா? நீதி கோரும் குடும்பத்தின் குரலை கேட்காமல் உத்தர பிரதேச அரசு என்ன செய்து கொண்டிருந்தது? அவர்கள் இந்த விவகாரத்தை அடக்க முயன்றனர். உரிய நேரத்தில் அந்த பெண்ணுக்கு மருத்துவ வசதிகள் வழங்கப்படவில்லை. ஒரு பெண் நம்மை விட்டு சென்று விட்டாள். ஹத்ராஸின் நிர்பயா இறக்கவில்லை, இரக்கமற்ற உத்தர பிரதேச அரசு மற்றும் அதன் நிர்வாகத்தால் கொல்லப்பட்டாள் என நான் சொல்ல விரும்புகிறேன். அவள் உயிருடன் இருந்தபோது நீதி வழங்கப்படவில்லை, அவள் பாதுகாக்கப்படவில்லை என பேசியிருந்தார்.