2014ம் ஆண்டு முதல் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் தொழிலாளர்களுக்கு எதிரானது.. திக்விஜய சிங்

2014ம் ஆண்டு முதல் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் தொழிலாளர்களுக்கு எதிரானது.. திக்விஜய சிங்

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களை வென்றது. இதனையடுத்து மத்தியல் தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் பா.ஜ.க. அரசின் அனைத்து நடவடிக்கைகளும் தொழிலாளர்களுக்கு எதிரானது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

2014ம் ஆண்டு முதல் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் தொழிலாளர்களுக்கு எதிரானது.. திக்விஜய சிங்

காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய சிங் நேற்று முன்தினம் கேந்திரியா ஷ்ரம் சங்கதனின் சத்தியாக்கிரகத்தில் அவர் பேசுகையில் கூறியதாவது: பா.ஜ.க. வலதுசாரி சிந்தாந்தத்தை கொண்ட கட்சி. நம் நாட்டில் முதல் முறையாக சங் சித்தாந்தம் உள்ளவர்கள் ஆட்சியில் உள்ளனர். 2014ம் ஆண்டு முதல் அவர்கள் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் தொழிலாளர்களுக்கு எதிரானது.

2014ம் ஆண்டு முதல் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் தொழிலாளர்களுக்கு எதிரானது.. திக்விஜய சிங்

பொதுத்துறைக்கு தொழில்நுட்ப திறன் இல்லை என்பதை வெளிகாட்டி, இதனால் தனியாமயமாக்க வேண்டும் என பொதுத்துறையை சாத்தியமற்றதாக ஆக்க அவர்கள் (மத்திய அரசு) விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். நம் நாட்டில் கடந்த 2014ம் ஆண்டு முதல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் ஆட்சி நடைபெற்று வருகிறது.