பா.ஜ.க.வின் உத்தரவின்பேரில் அசாதுதீன் ஓவைசி கட்சி பீகார் தேர்தலில் போட்டி… திக்விஜய சிங் குற்றச்சாட்டு

பா.ஜ.க.வின் உத்தரவின்பேரில் அசாதுதீன் ஓவைசி கட்சி பீகார் தேர்தலில் போட்டி… திக்விஜய சிங் குற்றச்சாட்டு

ராஷ்டிரிய ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக, பா.ஜ.க. உத்தரவின்பேரில் பீகார் சட்டப்பேரவை தேர்தலில் அசாதுதீன் ஓவைசி கட்சி போட்டியிடுகிறது என திக்விஜய சிங் குற்றம் சாட்டினார்.

அசாதுதீன் ஓவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி, முன்னாள் மத்திய அமைச்சர் தேவேந்திர பிரசாத் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி ஜனதா தளம், சமாஜ்வாடி மற்றும் ஜன்வாடி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து பீகார் சட்டப்பேரவை தேர்தலில் களம் இறங்குகிறது. முஸ்லீம்கள் அதிகம் உள்ள சீமான்சல் பகுதி சட்டப்பேரவை தொகுதிகளில் ஏ.ஐ.எம்.ஏ.எம். கட்சி வேட்பாளர்களை நிறுத்துகிறது.

பா.ஜ.க.வின் உத்தரவின்பேரில் அசாதுதீன் ஓவைசி கட்சி பீகார் தேர்தலில் போட்டி… திக்விஜய சிங் குற்றச்சாட்டு
திக்விஜய சிங்

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் அசாதுதீன் ஓவைசி கட்சி போட்டியிடுவது காங்கிரஸ்-ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியால் சிறுபான்மையினர் வாக்குகள் பிரியும் அது தங்களது கூட்டணியின் வெற்றியை பாதிக்கும் என காங்கிரஸ் கூறுகிறது. இந்த சூழ்நிலையில், பா.ஜ.க.வின் உத்தரவுப்படி அசாதுதீன் ஓவைசி கட்சி பீகார் தேர்தலில் போட்டியிடுகிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

பா.ஜ.க.வின் உத்தரவின்பேரில் அசாதுதீன் ஓவைசி கட்சி பீகார் தேர்தலில் போட்டி… திக்விஜய சிங் குற்றச்சாட்டு
பா.ஜ.க.

இது தொடர்பாக திக்விஜய சிங் கூறுகையில், ராஷ்டிரிய ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக பீகார் சட்டப்பேரவை தேர்தலில் ஓவைசி கட்சி போட்டியிடுகிறது. நான் மீண்டும் நிரூபித்தேன். பா.ஜ.க.வும், ஓவைசியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாகும் என தெரிவித்தார். கடந்த சில தினங்களுக்கு முன் அசாதுதீன் ஓவைசி, பீகாரில் பா.ஜ.க. வளர்ந்தற்கு காரணம் ராஷ்ரிய ஜனதா தளம்தான் என்று குற்றம் சாட்டினார். மேலும் சிறுபான்மையினர் வாக்குகளை பிரித்து, பா.ஜ.க.வுக்கு உதவுவதற்காக பீகார் தேர்தலில் தனது கட்சி போட்டியிடுகிறது என்ற குற்றச்சாட்டையும் அவர் மறுத்தார்.