பிரித்தல் மற்றும் ஆட்சி… பிரிட்டிஷ் சித்தாந்தத்தை பின்பற்றும் மோடி… திக்விஜய சிங் குற்றச்சாட்டு

 

பிரித்தல் மற்றும் ஆட்சி… பிரிட்டிஷ் சித்தாந்தத்தை பின்பற்றும் மோடி… திக்விஜய சிங் குற்றச்சாட்டு

பிரித்தல் மற்றும் ஆட்சி என்ற பிரிட்டிஷ் சித்தாந்தத்தை பிரதமர் மோடி பின்பற்றுகிறார் என்று திக்விஜய் சிங் குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து ராகுல் காந்திக்கு அடுத்தபடியாக பிரதமர் மோடிக்கு அதிக குடைச்சல் வருவது திக்விஜய சிங். மனதில் பட்ட கருத்துகளை வெளிப்படையாக கூறிவிடுவார் திக்விஜய சிங். நாட்டை மதத்தின் அடிப்படையில் ஆட்சி செய்வதன் மூலம் பிரிட்டிஷ் சித்தாந்தத்தை மோடி பின்பற்றுகிறார் என்று திக்விஜய சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

பிரித்தல் மற்றும் ஆட்சி… பிரிட்டிஷ் சித்தாந்தத்தை பின்பற்றும் மோடி… திக்விஜய சிங் குற்றச்சாட்டு
பிரதமர் மோடி

மத்திய பிரதேச காங்கிரசின் மூத்த தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான திக்விஜய சிங் டிவிட்டரில், மோடி ஜி நீங்கள் எப்.டி.ஜ. (அன்னிய நேரடி முதலீடு) என்பதை வெளிநாட்டு அழிக்கும் சித்தாந்தம் என்று அழைத்தீர்கள். நான் உங்களுடன் ஒரளவுக்கு உடன்படுகிறேன். பிளவு (பிரித்தல்) மற்றும் ஆட்சி என்ற சித்தாந்தத்தை பிரிட்டிஷ் எங்களுக்கு வழங்கியது. மேலும் நாட்டை மதத்தின் பெயரில் ஆட்சி செய்வதன் மூலம் அதே விதியை நீங்கள் பின்பற்றுகிறீர்கள். நாட்டின் சக்தி அதன் ஒற்றுமை என்று பதிவு செய்து இருந்தார்.

பிரித்தல் மற்றும் ஆட்சி… பிரிட்டிஷ் சித்தாந்தத்தை பின்பற்றும் மோடி… திக்விஜய சிங் குற்றச்சாட்டு
பிரிட்டிஷ் ஆட்சி

கடந்த திங்கட்கிழமையன்று பிரதமர் மோடி மாநிலங்களவையில் பேசுகையில், நாடு முன்னேறி வருகிறது. நாம் அன்னிய முதலீட்டை பற்றி பேசுகிறோம். ஆனால் ஒரு புதிய அன்னிய முதலீடு முன்னணியில் வந்துள்ளது என்பதை நான் காண்கிறேன். இந்த புதிய அன்னிய முதலீட்டிலிருந்து நாட்டை நாம் பாதுகாக்க வேண்டும். நமக்கு அன்னிய நேரடி முதலீடு தேவை. ஆனால் புதிய அன்னிய நேரடி முதலீடு, வெளிநாட்டு அழிவு சித்தாந்தம். அதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இந்திய உள்விவகாரங்கள் குறித்து வெளிநாட்டவர்கள் கருத்து தெரிவித்து குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதை மறைமுகமாக வெளிநாட்டு அழிக்கும் சித்தாந்தம் என்று மறைமுகமாக குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.