சிந்தியாவுக்கும், அவரது தந்தைக்கும் போதுமான மரியாதை மற்றும் வாய்ப்புகளை காங்கிரஸ் வழங்கியது.. திக்விஜய சிங்

சிந்தியாவுக்கும், அவரது தந்தைக்கும் போதுமான மரியாதை மற்றும் வாய்ப்புகளை காங்கிரஸ் வழங்கியது.. திக்விஜய சிங்

சிந்தியாவுக்கும் அவரது தந்தை மாதராவ் சிந்தியாவுக்கும் போதுமான மரியாதை மற்றும் வாய்ப்புகளை காங்கிரஸ் வழங்கியது என திக்விஜய சிங் தெரிவித்தார்.

தற்போது பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் ஜோதிராதித்ய சிந்தியா கடந்த மார்ச் மாதம் வரை காங்கிரசில் இருந்தார். சுமார் 18 ஆண்டுகளாக காங்கிரசில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் கமல் நாத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேரும் காங்கிரசிலிருந்து வெளியேறி பா.ஜ.க.வில் இணைந்தார். அது முதல் சிந்தியாவை வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய சிங் கடுமையாக தாக்கி வருகிறார்.

சிந்தியாவுக்கும், அவரது தந்தைக்கும் போதுமான மரியாதை மற்றும் வாய்ப்புகளை காங்கிரஸ் வழங்கியது.. திக்விஜய சிங்
ஜோதிராதித்ய சிந்தியா

திக்விஜய சிங் நேற்று டிவிட்டரில், ஜோதிராதித்ய சிந்தியா தொடர்பாக செய்தி நிறுவனம் வெளியிட்டு இருந்த கட்டுரையை பதிவேற்றம் செய்து, சிந்தியாயை விமர்சித்து பதிவு செய்து இருந்தார். திக்விஜய சிங் டிவிட்டரில், தற்போது பா.ஜ.க.வில் இருக்கும் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும், அவரது தந்தை மாதவ்ராவ் சிந்தியாவுக்கும் போதுமான மரியாதை மற்றும் வாய்ப்புகளை வழங்கியது.

சிந்தியாவுக்கும், அவரது தந்தைக்கும் போதுமான மரியாதை மற்றும் வாய்ப்புகளை காங்கிரஸ் வழங்கியது.. திக்விஜய சிங்
மாதவ்ராவ் சிந்தியா

மாதவ்ராவ் சிந்தியாவுடன் நான் நெருங்கி பணியாற்றி உள்ளேன். மாதவ்ராவ் சிந்தியாவுடன் ஜோதிராதித்ய சிந்தியாவை ஒப்பிடுவது நியாயமற்றது என பதிவு செய்து இருந்தார். இந்தூர் மாவட்டம் சன்வர் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரேம்சந்த் குட்டு அண்மையில், ஜோதிராதித்ய சந்தியாவும், அவரது தந்தை மாதவராவ் சிந்தியாவும் துரோகிகள் என விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.