சட்டப்பிரிவு 370 நீக்கிய பிறகும் காஷ்மீரில் முன்னேற்றம் இல்லை.. காங்கிரஸ் மூத்த தலைவர் குற்றச்சாட்டு..

சட்டப்பிரிவு 370 நீக்கிய பிறகும் காஷ்மீரில் முன்னேற்றம் இல்லை.. காங்கிரஸ் மூத்த தலைவர் குற்றச்சாட்டு..

மெஹபூபா முப்தியை காவலிருந்து விடுவிக்கப்பட்டதை வரவேற்பதாகும், சட்டப்பிரிவு 370 நீக்கிய பிறகும் காஷ்மீர் நிலவரத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை என திக்விஜய சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதியன்று ஜம்மு அண்டு காஷ்மீருக்கு சிறந்த அந்தஸ்து மற்றும் உரிமைகளை வழங்கி வந்த சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை அதிரடியாக நீக்கியது. மேலும் காஷ்மீரின் மாநில அந்தஸ்த்தை நீக்கியதோடு, ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக உருவாக்கியது. இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னதாக முன்எச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள், பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முப்தி, பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரிவினைவாதிகளை காவலில் வைத்தது.

சட்டப்பிரிவு 370 நீக்கிய பிறகும் காஷ்மீரில் முன்னேற்றம் இல்லை.. காங்கிரஸ் மூத்த தலைவர் குற்றச்சாட்டு..
மெஹபூபா முப்தி

காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியதும், காவலில் வைக்கப்பட்ட தலைவர்கள் படிப்படியாக விடுவிக்கப்பட்டனர். இந்த ஆண்டில் தொடக்கத்தில் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். ஆனால் மெஹபூபா முப்தி தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் 14 மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மெஹபூபா முப்தி காவலிருந்து விடுவிக்கப்பட்டார். மெஹபூபா முப்தி காவலிருந்து வெளியே வந்ததும் தனது கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார்.

சட்டப்பிரிவு 370 நீக்கிய பிறகும் காஷ்மீரில் முன்னேற்றம் இல்லை.. காங்கிரஸ் மூத்த தலைவர் குற்றச்சாட்டு..
சட்டப்பிரிவு 370 நீக்கம்

மெஹபூபா முப்தி தடுப்பு காவலிருந்து விடுவிக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் டிவிட்டரில், மெஹபூபா முப்தியை தடுப்பு காவலிருந்து விடுவிக்கப்பட்டதை நான் வரவேற்கிறேன். ஆனால் சட்டப்பிரிவு 370 நீக்கம் செய்வதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னும், பின்னும் நிலவரங்கள், தீவிரவாதம் முடிவுக்கு வந்து விட்டதா? காஷ்மீர் நிலைமை மேம்பட்டதா? அது (முன்னேற்றம்) இருப்பதை போல உணரவில்லை என பதிவு செய்து இருந்தார்.