ராகுல், பிரியங்கா காந்தியை பாராட்டமாட்டீர்கள் என்றால் ஏன் காங்கிரசில் இருக்கிறீர்கள்?… திக்விஜய சிங் ஆவேசம்

ராகுல், பிரியங்கா காந்தியை பாராட்டமாட்டீர்கள் என்றால் ஏன் காங்கிரசில் இருக்கிறீர்கள்?… திக்விஜய சிங் ஆவேசம்

தேசிய நலன் விவகாரங்கள்

ராகுல் மற்றும் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய சிங் நேற்று டிவிட்டரில் தொடர்ச்சியாக பதிவுகள் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா மற்றும் உத்தர பிரதேச நல விவகாரங்களில் ராகுல் ஜி மற்றும் பிரியங்கா ஜி எடுக்கும் ஆக்ரோஷமான நிலைப்பாட்டை நான் தனிப்பட்ட முறையில் வரவேற்கிறேன். காங்கிரசில் உள்ள சில தலைவர்கள் அவர்களை பாராட்டவில்லை அப்புறம் ஏன் அவர்கள் (சில தலைவர்கள்) காங்கிரசில் இருக்கிறார்கள்?

ராகுல், பிரியங்கா காந்தியை பாராட்டமாட்டீர்கள் என்றால் ஏன் காங்கிரசில் இருக்கிறீர்கள்?… திக்விஜய சிங் ஆவேசம்
ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி

விசாரணை அமைப்புகள்

நேரு-காந்தி குடும்பத்தை அமலாக்கத்துறை, வருமான வரித் துறை மற்றும் சி.பி.ஐ. ஆகிய விசாரணை அமைப்புகளின் அச்சுறுத்தலால் நேரு-காந்தி குடும்பத்தை தாக்கலாம் என்ற தவறாண எண்ணத்தில் மோடிஷா உள்ளனர். பிரிட்ஷாரை துணிச்சலாக எதிர்த்து சிறையில் பல ஆண்டுகள் இருந்தவர்கள் மற்றும் மகிவும் தைரியமிக்கவர்கள் ஆகையால் எந்தவொரு மாயையின் கீழும் மோடிஷா ஜி இருக்க வேண்டாம். ஆனால் அதேநேரம், ஒவ்வொரு செங்கலாக வைத்து கட்சி அமைப்பை எழுப்பும் சவாலை காங்கிரஸ் தலைமை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ராகுல், பிரியங்கா காந்தியை பாராட்டமாட்டீர்கள் என்றால் ஏன் காங்கிரசில் இருக்கிறீர்கள்?… திக்விஜய சிங் ஆவேசம்
அமித் ஷா, மோடி

மோடிஷா இரட்டையர்கள்

இங்குதான் நமக்கு ராகுல் ஜி மற்றும் பிரியங்கா ஜியின் சுறுசுறுப்பு தேவை. மோடிஷா இரட்டையர்களை எதிர் கொள்ளும் தைரியம் மற்றும் துணிவு அவர்கள் இருவரிடமும் உள்ளது என்பதை உறுதியாக சொல்கிறேன். காங்கிரசில் ராகுல் காந்தி தலைமையை ராகும் எதிர்க்கவில்லை. 2019ல் மோடிக்கு பிரதான சவாலாக அவர் (ராகுல்) உருவெடுத்தார். காங்கிரஸ் தலைவராகவோ அல்லது மக்களவையில் காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சியின் தலைவராகவோ தொடர்ந்து தன்னை கட்டியெழுப்பிருக்க வேண்டும். அவர் ஏன் தானாக முன்வந்து அந்த காட்சியில் இருந்து விலகினார்? காங்கிரசில் உள்ள இளைஞர்கள் உங்கள் பின்னால் நிற்கிறார்கள், நீங்கள் கோரும் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறார்கள். ஆகையால் ராகுல்ஜி தயவு செய்து வழிநடத்துங்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.