காஷ்மீர் விவகாரம்.. திக்விஜய சிங் பேசிய ஆடியோவை வெளியிட்ட பா.ஜ.க… சிக்கலில் காங்கிரஸ்

 

காஷ்மீர் விவகாரம்.. திக்விஜய சிங் பேசிய ஆடியோவை வெளியிட்ட பா.ஜ.க… சிக்கலில் காங்கிரஸ்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீரின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்யும் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங், பாகிஸ்தான் செய்தியாளரிடம் பேசிய ஆடியோ ஒன்றை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.

பா.ஜ.க.வின் ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா நேற்று டிவிட்டரில், மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய சிங், பாகிஸ்தான் செய்தியாளரிடம் பேசியதாக ஒரு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

காஷ்மீர் விவகாரம்.. திக்விஜய சிங் பேசிய ஆடியோவை வெளியிட்ட பா.ஜ.க… சிக்கலில் காங்கிரஸ்
சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கம்

அந்த ஆடியோ, கிளப் ஹவுஸ் செயலியில் திக்விஜய் சிங், பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவரிடம் பேசிய பதிவாகும். அந்த ஆடியோவில் திக்விஜய சிங், பாகிஸ்தான் செய்தியாளரிடம், அவர்கள் (பா.ஜ.க. அரசு) 370வது பிரிவை ரத்து செய்தபோது, காஷ்மீரியத் என்பது மதச்சார்பின்மையின் அடிப்படையான ஒன்று என்பதால் மனிதநேயம் காணவில்லை. ஏனெனில் ஒரு முஸ்லீம் பெரும்பான்மை மாநிலத்தில் ஒரு இந்து மன்னர் இருந்தார். இருவரும் ஒன்றாக பணியாற்றினர். உண்மையில் காஷ்மீரில் இடஒதுக்கீடு காஷ்மீர் பண்டிதர்களுக்கு அரசு வேலைகளில் வழங்கப்பட்டது.

காஷ்மீர் விவகாரம்.. திக்விஜய சிங் பேசிய ஆடியோவை வெளியிட்ட பா.ஜ.க… சிக்கலில் காங்கிரஸ்
அமித் மால்வியா

எனவே, 370வது பிரிவை ரத்து செய்து, ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை குறைக்கும் முடிவு மிகவும் வருத்தமளிக்கும் முடிவு. காங்கிரஸ் கட்சி நிச்சயமாக இந்த பிரச்சினையில் ஒரு மறுபரிசீலனை செய்ய வேண்டியது இருக்கும் என்று பேசியுள்ளார். அமித் மால்வியா இந்த ஆடியோ தனது டிவிட்டர் பக்கததில் பதிவேற்றம் செய்து, ஒரு கிளப் ஹவுஸ் உரையாடலில் ராகுல் காந்தி உயர்மட்ட உதவியாளர் திக்விஜய சிங் ஒரு பாகிஸ்தான் செய்தியாளரிடம் கூறுகிறார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அவர்கள் 370வது பிரிவை ரத்து செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்வார்கள்.. உண்மையில்? இதைத்தான் பாகிஸ்தான் விரும்புகிறது. என்று பதிவு செய்துள்ளார்.