விகாஸ் துபே கைது…. உ.பி போலீசாரின் என்கவுண்டரை தவிர்க்க பா.ஜ.க. தலைவரின் ஏற்பாடு…. திக்விஜய சிங் தகவல்

விகாஸ் துபே கைது…. உ.பி போலீசாரின் என்கவுண்டரை தவிர்க்க பா.ஜ.க. தலைவரின் ஏற்பாடு…. திக்விஜய சிங் தகவல்

உத்தர பிரதேசத்தில் போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வந்த ரவுடி விகாஸ் துபே கடந்த சில தினங்களுக்கு முன் கான்பூரில் 8 போலீசாரை சுட்டுக் கொன்று விட்டு தப்பியோடி விட்டார். தன்னை பிடிக்க போலீஸ் படை வருகிறது என்ற தகவலை காவல் துறையில் உள்ள கருப்பு ஆடுகள் மூலம் தெரிந்து கொண்ட விகாஸ் துபே, திட்டமிட்டே போலீசார் வரும் பகுதிகளில் சில தடைகளை ஏற்படுத்தி போலீசாரை சுட்டுக் கொன்று விட்டு தப்பி சென்றார்.

விகாஸ் துபே கைது…. உ.பி போலீசாரின் என்கவுண்டரை தவிர்க்க பா.ஜ.க. தலைவரின் ஏற்பாடு…. திக்விஜய சிங் தகவல்

இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து உத்தர பிரதேச போலீசார் விகாஸ் துபேயின் கூட்டாளிகளை வரிசையாக தேடி என்கவுண்டரில் போட்டு தள்ள தொடங்கினர். இந்த சூழ்நிலையில், நேற்று காலையில் மத்திய பிரதேசம் உஜ்ஜைன் நகரில் உள்ள பிரபல மஹாகால பைரவர் கோயிலுக்கு வந்த விகாஸ் துபேவை அந்த கோயிலின் பாதுகாவலர் சாமர்த்தியமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.

விகாஸ் துபே கைது…. உ.பி போலீசாரின் என்கவுண்டரை தவிர்க்க பா.ஜ.க. தலைவரின் ஏற்பாடு…. திக்விஜய சிங் தகவல்

ரவுடி விகாஸ் துபே கைது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் புதிய குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திக்விஜய சிங் டிவிட்டரில், உத்தர பிரதேச போலீசாரின் என்கவுண்டரை தவிர்க்க ஆதரவளிக்கப்பட்ட சரணடைதல் போல் தெரிகிறது. தகவல்களின்படி, ஒரு மத்திய பிரதேச பா.ஜ.க. தலைவர் அதை செய்துள்ளார் என பதிவு செய்து இருந்தார். பிரியங்கா காந்தி இது தொடர்பாக டிவிட்டரில், கேங்ஸ்டர் விகாஸ் துபேக்கு பாதுகாப்பு வழங்கியது பற்றிய உண்மையை அறிந்து கொள்ள சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். கான்பூரில் பதுங்கியிருந்த வழக்கை கையாள்வதிலும், துபேவை கைது செய்வதிலும் உத்தர பிரதேச பா.ஜ.க. அரசு முழுமையான தோல்வி அடைந்தது என குற்றம் சாட்டி பதிவு செய்து இருந்தார்.