ராமர் கோயில் பூமி பூஜை! இன்னும் எத்தனை பேரை மருத்துவமனைக்கு அனுப்ப விரும்புகிறீர்கள் மோடிஜி- திக்விஜய சிங்

 

ராமர் கோயில் பூமி பூஜை! இன்னும் எத்தனை பேரை மருத்துவமனைக்கு அனுப்ப விரும்புகிறீர்கள் மோடிஜி- திக்விஜய சிங்

அயோத்தியில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக உள்ள ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நாளை நடைபெற உள்ளது. அந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த சூழ்நிலையில் பூமி பூஜையில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடியை, ராமர் கோயில் கட்டுமான பணிக்கான அடிக்கல்லை நாட்டி இன்னும் எத்தரை பேரை மருத்துவமனைக்கு அனுப்பபோறீங்க என காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங் கடுமையாக தாக்கியுள்ளார்.

ராமர் கோயில் பூமி பூஜை! இன்னும் எத்தனை பேரை மருத்துவமனைக்கு அனுப்ப விரும்புகிறீர்கள் மோடிஜி- திக்விஜய சிங்

காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங் இது தொடர்பாக டிவிட்டரில் தொடர்ச்சியாக கருத்துக்ளை பதிவு செய்துள்ளார். அதில், மோடி ஜி, தீங்கு விளைவிக்கும் நேரத்தில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டியதன் மூலம் எத்தனை பேரை மருத்துவமனைக்கு அனுப்ப விரும்புகிறீர்கள்? யோகி ஜி, தயவு செய்து மோடி ஜிக்கு விளக்குங்கள். நீங்கள் இருக்கும்போது சனாதன் தர்மத்தின் அனைத்து வரம்புகளும் ஏன் உடைக்கப்படுகின்றன?

ராமர் கோயில் பூமி பூஜை! இன்னும் எத்தனை பேரை மருத்துவமனைக்கு அனுப்ப விரும்புகிறீர்கள் மோடிஜி- திக்விஜய சிங்

ஆகஸ்ட் 5ம் தேதியன்று ராமர் கோயில் பூமி பூஜை அமங்கலமான நேரமான மேற்கொள்ளப்பட உள்ளது குறித்து சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த் சரஸ்வதி எச்சரிக்கை செய்துள்ளார். பிரதமர் மோடி இந்து மதத்தின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான நம்பிக்கைக்கும் மேலானவரா பிரதமர் மோடி? இதுதான் இந்துத்துவா? என பதிவு செய்துள்ளார்.