உறக்கத்திலிருந்து எழுந்திருங்க… குரல் கொடுங்க… காங்கிரஸ் தொண்டர்களை உசுப்பேத்தும் திக்விஜய சிங்

 

உறக்கத்திலிருந்து எழுந்திருங்க… குரல் கொடுங்க… காங்கிரஸ் தொண்டர்களை உசுப்பேத்தும் திக்விஜய சிங்

உறக்கத்திலிருந்து எழுந்திருங்க, விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு வேளாண் சட்டங்களுக்கு எதிராக குரல் கொடுங்க என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு திக்விஜய சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை விவசாயிகளில் ஒரு பகுதியினர் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். விவசாயிகளின் இந்த எதிர்ப்புக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவாக உள்ளனர். இந்நிலையில் மத்திய பிரசேத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் அமல்படுத்துப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் நேற்று தெரிவித்து இருந்தார். அதேசமயம் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் காங்கிரஸ் கூட்டம் ஒன்றில் கட்சி தொண்டர்கள் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு வேளாண் சட்டங்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உறக்கத்திலிருந்து எழுந்திருங்க… குரல் கொடுங்க… காங்கிரஸ் தொண்டர்களை உசுப்பேத்தும் திக்விஜய சிங்
விவசாயிகள் போராட்டம்

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் பேசுகையில் கூறியதாவது: ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வருகின்றனர். ஏனென்றால் விவசாயிகளுக்கு பிரதமர் மோடி அநீதி செய்கிறார். மத்திய பிரதேச விவசாயிகள் அப்பாவிகள். ஆனால் காங்கிரஸ் தொண்டர்கள் கூட உறங்கிறார்கள். எழுந்திருங்க, போராட்டத்தில் கலந்து கொண்டு, இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக குரல் கொடுங்க. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உறக்கத்திலிருந்து எழுந்திருங்க… குரல் கொடுங்க… காங்கிரஸ் தொண்டர்களை உசுப்பேத்தும் திக்விஜய சிங்
மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் வேளாண் சட்டங்கள் குறித்து கூறுகையில், மத்திய பிரதேசத்தில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களும் அமல்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக எந்த குழப்பமும் இல்லை. மாநிலத்தில் 313 ஒன்றியங்களிலும் இந்த சட்டங்கள் தொடர்பாக பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்படும். இதனால் இந்த சட்டங்கள் மூலம் எவ்வாறு பலன்களை பெற முடியும் என்பதை விவசாயிகளால் சிறப்பாக புரிந்து கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.