சிவ்ராஜ் சிங் சௌகான் பேரம் பேசியது போன்ற வீடியோ வெளியிட்ட திக்விஜய் சிங் மீது வழக்கு! – ம.பி போலீஸ் அதிரடி

 

சிவ்ராஜ் சிங் சௌகான் பேரம் பேசியது போன்ற வீடியோ வெளியிட்ட திக்விஜய் சிங் மீது வழக்கு! – ம.பி போலீஸ் அதிரடி

சிவ்ராஜ் சிங் சௌகான் பேரம் பேசியது போன்ற வீடியோ வெளியிட்ட திக்விஜய் சிங் மீது வழக்கு! – ம.பி போலீஸ் அதிரடி
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கவிழ்க்க சிவ்ராஜ் சிங் சௌகான் பேரம் பேசியது போன்ற எடிட் செய்யப்பட்ட வீடியோவை வெளியிட்டதாக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் திக்விஜய் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவ்ராஜ் சிங் சௌகான் பேரம் பேசியது போன்ற வீடியோ வெளியிட்ட திக்விஜய் சிங் மீது வழக்கு! – ம.பி போலீஸ் அதிரடிகாங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்த போது கமல்நாத் அரசின் மது கொள்கை பற்றி விமர்சித்து சிவ்ராஜ் சிங் சௌகான் பேசியிருந்தார். அந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்குவது போல எடிட் செய்து பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வந்தனர். அதை திக் விஜய் சிங் தன்னுடைய சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டார். அது எடிட் செய்யப்பட்ட வீடியோ என்று அறிந்ததும் பதிவிட்ட உடனேயே அதை அகற்றவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று பா.ஜ.க சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் திக் விஜய் சிங் உள்ளிட்ட 12 பேர் மீது போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திக் விஜய் சிங், “அவர்கள் எஃப்.ஐ.ஆர் போட்டதில் கவலையில்லை, ஆனால், இந்த வீடியோவை யார் எடிட் செய்து வெளியிட்டார்கள் என்பதையும் அவர்கள் கண்டறிய வேண்டும்” என்றார்.