பா.ஜ.க. தலைவர்களை காட்டிலும் நான் சிறந்த இந்து… திக்விஜய் சிங் ஆவேசம்

 

பா.ஜ.க. தலைவர்களை காட்டிலும் நான் சிறந்த இந்து… திக்விஜய் சிங் ஆவேசம்

பா.ஜ.க. தலைவர்களை காட்டிலும் நான் சிறந்த இந்துதான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறினார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் ராமர் கோயில் கட்டுவதற்கு தேவையான நிதியை திரட்டும் நடவடிக்கைகளும் ஒரு பக்கம் நடந்து கொண்டு இருக்கிறது. ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை கட்டுமான தேவையான நிதிகளை திரட்டி வருகிறது. மேலும் வலதுசாரி அமைப்புகளான விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளமும் மத்திய பிரதேசத்தில் ராமர் கோயில் கட்டுமான தேவையான நிதியை திரட்டும் நோக்கில் பல பேரணிகளை நடத்தி வருகிறது.

பா.ஜ.க. தலைவர்களை காட்டிலும் நான் சிறந்த இந்து… திக்விஜய் சிங் ஆவேசம்
ராமர் கோயில் (மாதிரி படம்)

இந்த சூழ்நிலையில், இந்தூரில் ராமர் கோயிலுக்கு நிதி திரட்டடுவதற்காக நடந்த ஒரு பேரணி நடந்தது. அந்த பேரணி ஒரு மசூதி பகுதியில் வந்த போது சிலர் அந்த பகுதியில் ஹனுமான் பாடல்களை பாடியதோடு, அந்த மசூதியை சேதப்படுத்த முயற்சி செய்யதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியதாவது:

பா.ஜ.க. தலைவர்களை காட்டிலும் நான் சிறந்த இந்து… திக்விஜய் சிங் ஆவேசம்
விஷ்வ இந்து பரிஷத்

இந்து மற்றும் முஸ்லிம்களை ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை பிரிக்கிறது. ராமர் கோயில் கட்டுவதற்காக நிதி திரட்ட ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு யார் அங்கீகராம் கொடுத்தது. பா.ஜ.க. தலைவர்களை காட்டிலும் நான் சிறந்த இந்து. இவ்வாறு அவர் தெரிவித்தார்.