முதன்முறையாக சென்னையில் எல்இடி டிஜிட்டல் சிக்னலை தொடக்கி வைத்தார் காவல் ஆணையர்!

 

முதன்முறையாக சென்னையில் எல்இடி டிஜிட்டல் சிக்னலை தொடக்கி வைத்தார் காவல் ஆணையர்!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மக்கள் தொகை அதிகம் என்பதாலும் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகமாக இருக்கும் இடம் என்பதாலும் அவ்வப்போது புதிய தொழில் நுட்பங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னையின் காவல் ஆணையராக ஏ.கே விஸ்வநாதன் இருந்த போது, சென்னை முழுவதும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. அதன் மூலம் மாநகரில் நடக்கும் பெரும்பாலான அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. சென்னையை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிசிடிவி நடைமுறை அமலுக்கு வந்தது. சமீபத்தில், சென்னையின் காவல் ஆணையராக பொறுப்பேற்ற மகேஷ்குமார் அகர்வால், பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

முதன்முறையாக சென்னையில் எல்இடி டிஜிட்டல் சிக்னலை தொடக்கி வைத்தார் காவல் ஆணையர்!

இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் சென்னையில் முதன்முறையாக எல்இடி டிஜிட்டல் சிக்னலை தொடக்கி வைத்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் காந்தி சிலை அருகே உள்ள சிக்னலில் டிஜிட்டல் சிக்னலை தொடக்கி வைத்த அவர், அதனை பற்றி விரிவான விளக்கம் அளித்தார். மேலும், ஜப்பானில் இருப்பது போன்ற புதிய தொழில் நுட்ப சிக்னல் சென்னையில் தற்போது தொடக்கி வைக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.