2 மாசத்துக்கு பயன்பாட்டு மின் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி பண்ணுங்க.. காங்கிரஸ் கோரிக்கை..

2 மாசத்துக்கு பயன்பாட்டு மின் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி பண்ணுங்க.. காங்கிரஸ் கோரிக்கை..

கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க. அரசு நடைபெற்று வருகிறது. நாட்டின் மற்ற மாநிலங்கள் போல் கோவா மக்களும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், நிதி நெருக்கடியால் கஷ்டப்படும் அம்மாநில மக்களுக்கு நிவாரண அளிக்கும் வகையில் 2 மாதங்களுக்கு பயன்பாட்டு மின் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யுமாறு முதல்வர் பிரமோத் சாவந்துக்கு காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

2 மாசத்துக்கு பயன்பாட்டு மின் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி பண்ணுங்க.. காங்கிரஸ் கோரிக்கை..

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எதிர்கட்சி தலைவருமான திகம்பர் காமத் இது தொடர்பாக ஊடக அறிக்கையில் கூறியிருப்பதாவது: இரண்டு மாதங்களுக்கு மின் கட்டண பில்களின் நிலையான கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி என்ற செயலற்ற நடவடிக்கை அறிவிப்பு, கோவிட் தொற்றுநோயில் நிதி சுமையில் மக்களுக்கு எந்த நிவாரணமும் அளிக்காது. பயன்பாட்டு மின் கட்டணத்தில் 50 சதவீதத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் பரிந்துரைகளை முதல்வர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்.

2 மாசத்துக்கு பயன்பாட்டு மின் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி பண்ணுங்க.. காங்கிரஸ் கோரிக்கை..

கோவா முழுவதும் இடைவிடாமல் கிளர்ச்சி செய்தது மற்றும் அதிக மின் கட்டணம் தொடர்பாக பொது மக்களின் குரலை எழுப்புவதற்காக கோவாவுக்காக பேசுங்கள் என்ற டிஜிட்டல் பிரச்சாரத்தை நடத்திய காங்கிரஸ் கட்சியின் அனைத்து தொண்டர்களையும் நான் வாழ்த்துகிறேன். அரசாங்கம் நம்மை மீண்டும் கிளர்ச்சி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளாது என நம்புகிறேன். கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதாரம் சரிவின் சோதனை காலங்களில் மக்களின் மீது அதிகபட்ச உணர்வு திறன் காண்பிப்பதும் அவர்களுக்கு அதிகபட்ச நிவாரணம் அளிப்பதும் அரசின் கடமையாகும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.