உளவுத்துறை டிஐஜி உள்ளிட்ட 5 பேருக்கு தமிழக முதலமைச்சர் விருது அறிவிப்பு!

 

உளவுத்துறை டிஐஜி உள்ளிட்ட 5 பேருக்கு தமிழக முதலமைச்சர் விருது அறிவிப்பு!

தமிழகத்தில் காவல்துறையில் வீரதீர செயல் புரிந்த டிஐஜி டாக்டர் கண்ணன் உள்ளிட்ட 5 அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழக உளவுத்துறையில் உள்நாட்டு பாதுகாப்பில் மிகச் சிறப்பாகவும், துணிச்சலாகவும் புலனாய்வு பணிகளை செய்ததற்காக உளவுத்துறையின் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவின் ஐ.ஜி.யான டாக்டர் கண்ணன் ஐ.பி.எஸ். தலைமையிலான குழுவிற்கும், தமிழக முதல்வரின் துணிச்சல் விருது வழங்க முடிவு செய்து அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் விருதுக்கு தேர்வான 5 பேரு உதவி ஆய்வாளர் வில்சனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற 2 தீவிரவாதிகளை கைது செய்து வீரத்தீரல் செயல் புரிந்துள்ளனர்.

உளவுத்துறை டிஐஜி உள்ளிட்ட 5 பேருக்கு தமிழக முதலமைச்சர் விருது அறிவிப்பு!

தமிழக உளவுத்துறையின் உள்நாட்டுப் பாதுகாப்பு பிரிவின் டி.ஐ.ஜி.யாக இருந்த டாக்டர் கண்ணன் ஐ.பி.எஸ்., கடந்த மார்ச் மாதம் ஐ.ஜி.யாக பதவி உயர்த்தப்பட்டார். பதவி உயர்த்தப்பட்டு உளவுத்துறையின் உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவிலேயே தொடர்ந்து பணியாற்றி வருகிறார். தமிழகத்தில் ஜிகாத் அடிப்படைவாதத்தை ஒழித்ததில் கண்ணன் தலைமையிலான குழுவுக்கு முக்கிய பங்கு உண்டு. அதன்படி கியூ பிரிவு எஸ்.பி. மகேஷ், சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ். பி. அரவிந்த், டி.எஸ்.பி பண்டரிநாதன், ஆய்வாளர் தாமோதரனுக்கு விருது வழங்கப்படவுள்ளது. உதவி ஆய்வாளர் வில்சனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற 2 தீவிரவாதிகளை கைது செய்த 5 பேருக்கும் முதலமைச்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் முதல்வர் பதக்கம் மற்றும் 5 லட்ச ரூபாய் பண முடிப்பும் வழங்கும் அரசாணையை தமிழக உள்துறை செயலாளர் பிரபாகர்பிறப்பித்திருக்கிறார்.