காவல்துறை சார்பில் விர்ச்சுவல் காப் செயலி அறிமுகம்

 

காவல்துறை சார்பில் விர்ச்சுவல் காப் செயலி அறிமுகம்

திருச்சி

சைபர் க்ரைம் குற்றங்களை தடுக்க காவல் துறையினர் நவீன தொழில்நுட்பங்களை கையாள கற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராம் தெரிவித்தார். தமிழக காவல்துறை மற்றும் திருச்சி மத்திய மண்டல காவல்துறை சார்பில், பொதுமக்கள் உடனான தொடர்பை மேம்படுத்த விர்ச்சுவல் காப் என்றசெயலி இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

காவல்துறை சார்பில் விர்ச்சுவல் காப் செயலி அறிமுகம்


இதனையொட்டி, திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய மண்டல ஐ.ஜி.,ஜெயராம், திருச்சி சரக டிஐஜி முனைவர் ஆனிவிஜயா, மாவட்ட எஸ்.பி.,
செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விர்ச்சுவல் காப் (VIRTUAL COP) செயலியை அறிமுகம் செய்தனர்.இவ்விழாவில் 5 மாவட்டங்களை சேர்ந்த எஸ்.பி-க்கள், ஏடிஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள், ஆய்வாளர்கள் மற்றும் உதவிஆய்வாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய, ஐ.ஜி ஜெயராம், தற்போது குற்றவாளிகள் புதுபுது யுக்திகளை கொண்டு வங்கி கொள்ளை, சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபடுவதாகவும்,இதுபோன்ற குற்றச்செயலில் ஈடுபடுபவர்களை கண்டறியவும், குற்றச் செயல்களை தடுக்கவும்,காவல் துறையினர் நவீன தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.