பீகார் தேர்தல் நெருங்கும் வேளையில், பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேற விரும்பும் பஸ்வான் கட்சி?

 

பீகார் தேர்தல் நெருங்கும் வேளையில், பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேற விரும்பும் பஸ்வான் கட்சி?

பீகார் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேற ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி விரும்புவதாக தெரிகிறது. அதேசமயம் இது தொடர்பாக கட்சிக்குள் இரு வேறு கருத்து நிலவுவதாக தகவல்.

பீகார் சட்டப்பேரவை தேர்தல் அக்டோபர் 28ம் தேதி தொடங்கி மொத்தம் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. மற்றும் லோக் ஜனசக்தி ஆகிய தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சட்டப்பேரவையில் சந்திக்கும் என பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அறிவித்தார். ஆனால் கூட்டணியில் உள்ள நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கும், லோக் ஜனசக்தி கட்சிககும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

பீகார் தேர்தல் நெருங்கும் வேளையில், பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேற விரும்பும் பஸ்வான் கட்சி?
சிராக் பஸ்வான், ராம் விலாஸ் பஸ்வான்

லோக் ஜனசக்தி தலைவர்களில் பலருக்கு நிதிஷ் குமார் தலைமையில் தேர்தலை சந்திப்பதில் விருப்பம் இல்லை. மேலும் அந்த கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான் அண்மையில் அவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், பீகார் அரசாங்கத்தில் மக்கள் அதிருப்தியில் இருப்பதால் அது தேர்தல் முடிவுகளை பாதிக்கலாம் என்று நிதிஷ் குமாரை குற்றம்சாட்டி எழுதியிருந்தார். இந்த சூழ்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து நீடிப்பதா அல்லது பீகார் சட்டப்பேரவை தேர்தலில் போதுமான தொகுதிகள் தரவில்லையென்றால் கூட்டணியிலிருந்து விலகுவதா என்பதில் லோக் ஜனசக்தி கட்சிக்குள் கருத்து வேறுபாடு தலை தூக்கியுள்ளது. இதனால் அந்த கட்சியின் தலைவர் சிராக் பஸ்வானால் ஒரு திடமான முடிவு எடுக்கமுடியவில்லை.

பீகார் தேர்தல் நெருங்கும் வேளையில், பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேற விரும்பும் பஸ்வான் கட்சி?
நிதிஷ் குமார்

மேலும், சிராக் பஸ்வான் தற்போது 2 நெருக்கடிகளில் சிக்கி தவிக்கிறார். முதலாவது அவரது தந்தையான ராம் விலாஸ் பஸ்வான் எஸ்கார்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்காக போராடி கொண்டு இருக்கிறார். இரண்டாவதாக கட்சி எம்.பி.களில் பெரும்பாலானவர்கள் பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் போட்டியிட வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இருப்பினும் ஒரு சில தினங்களில் லோக் ஜனசக்தி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்குமா அல்லது வெளியேறுமா என்பது உறுதியாக தெரிந்து விடும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.