பெட்ரோலைத் தொடர்ந்து ரூ.100ஐ நெருங்கிய டீசல் விலை… அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!

பெட்ரோலைத் தொடர்ந்து ரூ.100ஐ நெருங்கிய டீசல் விலை… அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தைப் பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைக்கின்றன. கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பின் போது கச்சா எண்ணெய் கடும் வீழ்ச்சி அடைந்தது. இதனால், இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறைந்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியதால் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏற்றத்தை கண்டது.

பெட்ரோலைத் தொடர்ந்து ரூ.100ஐ நெருங்கிய டீசல் விலை… அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!

அண்மையில் நடந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலால் ஒரு மாதத்திற்கு பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. தேர்தல் முடிந்ததும் விலை மீண்டும் கிடுகிடுவென ஏறத் தொடங்கியது. குறிப்பாக கடந்த 4ஆம் தேதியில் இருந்து கிட்டத்தட்ட 20 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதால் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல் விலை 100ஐ கடந்துள்ளது.

பெட்ரோலைத் தொடர்ந்து ரூ.100ஐ நெருங்கிய டீசல் விலை… அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!

இந்த நிலையில், பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலையும் ரூ.100ஐ நெருங்கி வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அளித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் தான் இந்தியாவிலேயே அதிகளவில் பெட்ரோல், டீசல் விலை இருப்பதாக தெரிகிறது. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.106.39 ஆகவும் டீசல் விலை ரூ.99.24 ஆகவும் உயர்ந்துள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் டீசல் விலை ரூ.100ஐ கடந்துவிடும் என சொல்லப்படுகிறது. சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி பெட்ரோல் விலை ரூ.96.71 ஆகவும், டீசல் விலை ரூ.ரூ.90.92 ஆகவும் உள்ளது.

பெட்ரோலைத் தொடர்ந்து ரூ.100ஐ நெருங்கிய டீசல் விலை… அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கான காரணத்தை விளக்கிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், கச்சா எண்ணெய் விலையின் அதிகரிப்பே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார். இறக்குமதி 80 சதவீதமாக இருப்பதால் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்றும் பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவது பற்றி ஜிஎஸ்டி கவுன்சில் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.