இனி மொபைல் போன்களுக்கு11 இலக்க முறை?- டிராய் விளக்கம்

 

இனி மொபைல் போன்களுக்கு11 இலக்க முறை?- டிராய் விளக்கம்

இந்தியாவில் மொபைல் அறிமுகப்படுத்த நாளிலிருந்து 10 இலக்க எண்களை உபயோகப்படுத்திக் கொண்டு வரும் நிலையில் திடீரென கடந்த சில நாட்களாக ஒரு சில ஊடகங்களில் இந்தியாவில் மொபைல் எண், 11 இலக்க எண்ணாக மாறப் போவதாக செய்திகள் வெளியாகின. தற்போது உள்ள 10 இலக்க எண்களுக்கு
முன்னால் ஒரு ஜீரோ சேர்த்துக்கொள்ளும்படி விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இனி மொபைல் போன்களுக்கு11 இலக்க முறை?- டிராய் விளக்கம்

மொபைல் போன்களுக்கு தற்போது புழக்கத்தில் உள்ள 10 எண்கள் இலக்கு முறையே தொடரும் என டிராய் விளக்கமளித்துள்ளது. மொபைல் போன்களுக்கு11 இலக்க முறை எதையும் பரிந்துரைக்கவில்லை என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மொபைல் எண்ணுக்கு முன்னால் ஜீரோ சேர்த்துக்கொள்ளும் அறிவிப்பு எதுவும் வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் ஏற்கனவே உபயோகப்படுத்தப்பட்ட எண்களே தொடரும் என்றும் அறிவித்துள்ளது.