darbar
  • January
    26
    Sunday

Main Area

Mainதமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி ஒரு இயக்குநரும்கூட தெரியுமா?

 டி.பி ராஜலட்சுமி
டி.பி ராஜலட்சுமி

அவர் பெயர் திருவையாறு பஞ்சாபகேசன் ராஜலட்சுமி என்கிற டி.பி ராஜலட்சுமி.1911-ம் வருடம் நவம்பர் 11-ம் தேதி,தஞ்சை மாவட்டம் சாலிய மங்கலத்தில் பிறந்தவர்.டிவி சுந்தரம் என்கிற நாடக நடிகரை மணந்து கமலா என்கிற பெண்ணுக்கு தாயானவர்.1929-லேயே சினிமாவில் நாயகி ஆகிவிட்ட ராஜலட்சுமி எம்.ஜி.ஆரை விட ஆறுவருடம் மூத்தவர்,சிவாஜியைவிட 17 வருடம் மூத்தவர்.இவர்கள் எல்லாம் சினிமாவுக்கு வருவது பற்றி கனவுகூட கானாத 1929-லேயே எஸ்.ரகுபதி இயக்கிய மதுரைவீரன் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தவர்.

rajalakshmi

அதுவரை மேடை நாடகங்கள், திரைப்படங்கள் அனைத்திலும் பெண் வேட மிட்ட ஆண்களே கதாநாயகியாக நடித்துக் கொண்டு இருந்தார்கள்.எல்லா முன்னோடிகளையும் போலவே டி.பி ராஜலட்சுமியும் தன் காலத்தை தாண்டி சிந்தித்தவர்.வறுமையில் வாடும் கிராம மக்களிடையே பெண்குழந்தை பிறந்தால் கொன்றுவிடும் வழக்கம் அப்போதே இருந்திருக்கிறது. அப்படிக் கொல்லப்பட இருந்த ஒரு குழந்தையை ராஜலட்சுமியும் அவர் கணவர் டி.வி சுந்தரமும் தத்தெடுத்து மல்லிகா என்று பெயரிட்டு வளர்த்திருக்கின்றனர்.

பத்தாண்டு காலம் தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ஒற்றை நாயகியாக வலம் வந்த ராஜலட்சுமி பத்தாண்டுகள் கழித்து 1939-ல் இயக்குநர் ஆகிறார். அவர் எழுதிய ' மிஸ் கமலா' என்கிற நாவலை  திரைப்படமாக்கி பெரிய வெற்றி பெற்ற ராஜலட்சுமி அதற்குப் பிறகு தொடர்ந்து இயக்குநர் , கதாசிரியர், நடிகர் என பலதுறை ஆளுமையானதோடு சொந்த திரைப்பட கம்பெனியை துவங்கி இருக்கிறார். 

t.p.rajalakshmi

சென்னை கீழ்பாக்கத்தில் ( எண் -1 ராஜரத்தினம் தெரு ) இருந்த ஒரு ஆந்திர ஜமீந்தாரின் அரண்மனைதான் அவர் வாங்கிய முதல் சொத்து,அதன் பிறகு அதே தெருவில்.இருந்த பல வீடுகளையும்,கீழ்பாக்கத்தில் பேராசிரியர் சுப்பிரமணியம் தெரு,வாசு தெரு என்று பல தெருக்களில் ஏகப்பட்ட சொத்துகளை டி.பி ராஜலட்சுமி வாங்கி இருக்கிறார்.அவரது சகோதரர்களின் குடும்பங்களும் அவருடன், அதே அரண்மனை வீட்டில்தான் வாழ்ந்திருக்கிறார்கள்.

t.p.rajalakshmi

ராஜலட்சுமி திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டபோது அவரது சகோதரரும் இசையமைப்பாளருமான அவரது டி.பி ராஜகோபால் என்பர்தான் நிர்வாகத்தை கவனித்து இருக்கிறார். அவர் எத்தனை உயர்ந்த இடத்தில் இருந்தார் என்பதற்கு அவர் இயக்கி நடித்த ' வள்ளி திருமணம்' நாடக விளம்பரமே சிறந்த சாட்சியமாக இருக்கிறது.அந்த விளம்பர வாசகங்கள் 90 வருடங்களுக்கு முந்தைய தமிழ் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு இதைப் படியுங்கள்.

t.p.rajalakshmi

‘மேடை அலங்கிருத ,கானலோல கானமிர்த சினிமா ராணி டி.பி ராஜலட்சுமி’ என்று அவரை புகழ்கிறது பயோனியர் கன்பெனியின் ' வள்ளி திருமணம்' திரைப்பட விளம்பரம்.மேலும், 
இதற்கு முன் ராமாயணம், சாவித்திரி முதலிய படங்களில் நடித்து தென்னிந்தியா மொத்தமும் நற்கியாதி ( நல்ல புகழ்) பெற்ற முதல்தரமான நடிகர்களைக் கொண்டு அதிகப் பணச்'சிலவில்' தயாரிக்கப்பட்ட வள்ளி திருமணம். முழுவதும் பேசும்படம்.48 பாடல்கள். ஒய்யார உடை,பார்க்கதக்க சீன்கள்!.மிஸ் டி.பி ராஜலட்சுமி,நாயகி வள்ளி,மாஸ்டர் எம். துரைசாமி சுப்பிரமணியர்,மாஸ்ட்டர் டி.வி 'சுந்திரம்'நாரதர் என்கிறது விளம்பரம்.1929-ல் நடிக்கவந்து 1939ல் இயக்குனர் ஆன ராஜலட்சுமி சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்றவர்.மிஸ் கமலா,மிஸ்ட்டர் சந்திர சேகர் உடபட ஆறு நாவல்கள் எழுதி இருக்கிறார்.

2018 TopTamilNews. All rights reserved.